செவ்வாய், 24 மே, 2016

ராதாபுரம் அப்பாவு கோரிக்கை... அதிமுகவின் இன்பதுரையை பதவி ஏற்க அனுமதிக்க கூடாது

ராதாபுரம் தொகுதியில் பதிவான அஞ்சல் வாக்குககளை மீண்டும் எண்ண வேண்டும். அதுவரை அதிமுகவின் இன்பதுரையை எம்எல்ஏ பதவியேற்க அனுமதிக்க கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் அப்பாவு மனு அளித்துள்ளார்.
ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு அளித்துள்ள மனுவில்,‘ ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் எனக்கு ஆதரவாக 300 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருந்தன. எனவே, அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரினேன்.
வெற்றி வித்தியாசம் அஞ்சல் வாக்குகளை விட குறைவாக இருந்தால் மீண்டும் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும் என்பது விதி. எனவே, ராதாபுரம் தொகுதியில் அஞ்சல் வாக்குகளை எண்ண வேண்டும். அத்துடன். முடிவ தெரியும் வரை அதிமுகவில் வெற்றி பெற்ற இன்பதுரை எம்எல்ஏவாக பதவியேற்க அனுமதிக்க கூடாது’ என கூறியுள்ளார் tamiltherhindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக