புதன், 4 மே, 2016

தற்கொலை செய்த மலையாள பட தயாரிப்பாளரை தொடர்ந்து காதலியும் தற்கொலை

மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலி வினிதா நாயரும்  தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அஜய் கிருஷ்ணன் என்ற 29-வயது இளைஞர் ‘அவருடே ராவுகள்’ என்ற மலையாளப் படத்தை தயாரித்துள்ளார். இது இவர் தயாரித்த முதல் படம். படத்தின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ‘அவருடே ராவுகள்’ படத்தின் பிரிவியூ ஷோ திரையிடப்பட்டுள்ளது. படம் தயாரிப்பாளர் அஜய்க்கு திருப்தி அளிக்கவில்லை.
ரூ.4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அஜய் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில் அஜய் கிருஷ்ணனின் காதலி வினிதா நாயர் அவரது வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அஜய் கிருஷ்ணனின் தற்கொலைக்கு பிறகு வினிதா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரது வீட்டில் இருந்து தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக