திங்கள், 30 மே, 2016

கலைஞர்: திமுகவை தோற்கடித்தது தேர்தல் ஆணைய அதிமுக கூட்டணிதான்

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைய அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேர்தல் ஆணையமே காரணம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்பட்டது. தேர்தல் பணிகள் துவங்கியதில் இருந்தே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்பட்டது.

தோல்வி ஆளுங்கட்சியின் பண பலமும், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைபட்சமான செயலும் தான் திமுக தோல்வி அடைய காரணம். எந்த சவாலையும் சந்திக்கும் நிலையில் தான் திமுக உள்ளது.
ஜெயலலிதா தமிழகத்தின் நன்மைக்காக திமுகவுடன் சேர்ந்து செயல்பட ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நல்லது நடக்கும் எனில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை வரலாறு தெரிவிக்கும்.

Read more at: /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக