ஞாயிறு, 29 மே, 2016

ஆறு மொழிகளில் பிரதமர் அலுவலகம் . ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி, குஜராத்தி ...

பிரதமர் நரேந்திர மோடி அலுவலக இணையதளம் தற்போது ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, வங்கம், மராத்தி, குஜராத்தி என ஆறு மொழிகளிலும் பார்க்கத்தக்கவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இணையதளத்தை தொடங்கிவைத்தார்.http://www.pmindia.gov.in என்ற இணைய முகவரியில் இயங்கிவந்த பிரதமர் மோடியின் இணையதளம் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்து வந்தது. தற்போது, கூடுதலாக ஐந்து மொழிகளில் பார்க்கும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கன்னடம் ஓடிஷா ராஜஸ்தான் பஞ்சாபி அஸ்ஸாம் போஜ்பூரி மராட்டியம் எல்லாம் என்ன பாவம் செய்ஞ்சது?
இந்த இணையத்தில் மக்கள் நினைக்கும் கருத்துகளை அவரவர் மொழிகளிலேயே அனுப்பிவைக்கும் ‘ஆப்ஷன்’ வழங்கப்பட்டுள்ளது. நாட்டு நலன், வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் குறித்தும் மக்கள், தங்கள் கருத்துகளை அனுப்பிவைக்க முடியும்.
மாறிவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப தகவல்கள் இணையவழியில் மக்களைச் சென்றடைய வேண்டும் என விரும்புகிறார். நிர்வாக செயல்பாடுகளை இணையவழியில் நடத்தும் முயற்சிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக