புதன், 18 மே, 2016

தமிழக் தேர்தல் பெட்டிங் ..பலகோடிகள் புரளும் ரகசிய பேரம்

தமிழகத்தில், ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ள நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என, பல கோடி ரூபாய் அளவுக்கு, 'பெட்டிங்' கட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
சில இடங்களில், தங்கம், வெள்ளி மற்றும் நிலம் போன்றவற்றை பந்தய பொருளாக வைத்து, தேர்தல் சூதாட்டம் கனஜோராக நடக்கிறது.
'அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்குமா; பிடிக்காதா? தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்குமா; அமைக்காதா? மக்கள் நலக் கூட்டணி, ஒரு இடத்திலாவது வெற்றி பெறுமா; பெறாதா? அன்புமணி ஜெயிப்பாரா, மாட்டாரா?' என, பல வகைகளில், இந்த
பெட்டிங் கட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தொகுதி அளவிலும், இந்த சூதாட்டம் துவங்கி உள்ளது. எந்த கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது குறித்தும், ஓட்டு வித்தியாசம் குறித்தும், பணம் வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது.

இந்த பெட்டிங், பல தரப்பிலும் நடப்பதால், அவரவர் சார்ந்த வியாபாரம், தொழில் தொடர்பான பந்தயங்கள் கட்டப்பட்டுள்ளன. அதன்படி, வெள்ளிபொருட்களையும், தங்க நகைகளையும், வியாபாரிகள் பெட்டிங் கட்டியுள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபர்கள், புரோக்கர்கள் தரப்பில், வீட்டுமனை, குடியிருப்புகள் பெயரில், பெட்டிங் கட்டி வருகின்றனர். கார், இரு சக்கர வாகனங்க ளையும், பெட்டிங் கட்டி உள்ளனர்.
'டாஸ்மாக்' குடிமகன்கள், பீர், சரக்குகளை, பெட்டிங் கட்டுகின்றனர். சிலர் வித்தியாசமாக, தோற் றால் மொட்டை அடிப்பது, ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்வது என்ற வகையிலும், பெட்டிங் கட்டியுள்ளனர். இந்த சூதாட்டம், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், இன்று இரவு வரை தொடரும் என,எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் 'பெட்டிங்': தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு, தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ளது. அதனால், தமிழகத்தில் அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்ற சூதாட்டம், ஆந்திராவில் சூடு பிடித்துள்ளது.இதுகுறித்து, அம்மாநில சித்துார் மாவட்டம், நாகலாபுரத்தைச் சேர்ந்த, ஏற்றுமதி வர்த்தகர் கஜநாதன் கூறியதாவது:
ஆரம்பத்தில், 5,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாயில் துவங்கி, தற்போது, பல லட்சம் ரூபாய் வரை, பணம் வைத்து சூதாட்டம் நடக்கிறது. தமிழகத்தில், ஆட்சியை பிடிப்பது யார் என்பது மட்டுமல்ல; கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட எல்லையோர தொகுதிகளில் யார் ஜெயிப்பார் என்றும் பெட்டிங் கட்டுகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில், அ.தி.மு.க., ஜெயிக்குமா, மக்கள் தே.மு.தி.க., வெற்றி பெறுமா என்ற சூதாட் டத்தில், நிறைய பேர் பணம் கட்டி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -  தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக