செவ்வாய், 3 மே, 2016

வைகோ: கருத்து கணிப்புகள் திமுகவை வெற்றி பெற செய்யப்படும் சதி திட்டம்

உளுந்தூர்பேட்டை: தினமலர் மற்றும் நியூஸ் 7 இணைந்து இன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, வைகோ அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்தை ஆதரித்து வேன் மூலம் பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தில் அவர் பேசுகையில்: இன்று காலையில் தினமலர் , நியூஸ் 7 தொலைக்காட்சி இணைந்து ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மேற்கு மண்டலத்தில் எடுத்த கணிப்பில் மொத்தம் 57 தொகுதிகளில் தி.மு.க,. 33 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,24 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது . தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வைக்கும் சதி திட்டம். இந்த கருத்துக்கணிப்பு பொய்யானது. மாணவர்கள், விவசாயிகளிடம் கேட்டு யாரும் பார்க்காமல் ஒட்டி போடப்பட்டது, பிரித்து பார்த்தோம் என்று சொல்கின்றனர். குறிப்பாக இது தி.மு.க,காரர்களாக பார்த்து இந்த கேள்வியை கேட்டுள்ளனர். அதை விட கொடுமை என்னவென்றால் பென்னாகரத்தில் போட்டியிடும் அன்பு மணி 3 வது இடத்திற்கு தள்ளப்படுவார் என கூறுகின்றனர். இது நம்பும் படியாக இல்லை.


பா.ம.க., எங்களின் எதிரி தான் இருந்தாலும் இது தவறானது என்று சொல்கிறேன். மக்கள் நல கூட்டணி தோல்வியை தழுவும் என்றும் கூறப்பட்டுள்ளது . இன்று காலை முதல் நாளிதழ் பார்த்து எங்களின் தொண்டர்கள் கலக்கமடைந்துள்ளனர். எங்களை வலுவிழக்க செய்யும் சதி ஆகும். இதனை முறியடித்து எங்கள் அணி வெற்றி பெறும்.

தி.மு.க.,வுக்கு பக்கம், பக்கமாக செய்தி வெளியிடுகிறது தினமலர். குறிப்பாக ஸ்டாலினுக்கு ஒரு பக்கம், கனிமொழிக்கு ஒரு பக்கம் ஒதுக்குகின்றனர். எனக்கு அரை பத்தி ஒதுக்குகின்றனர். இதாவது தருகின்றனரே என்று நினைத்து கொள்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக