புதன், 25 மே, 2016

ராகவா லாரன்ஸ் இலவச பள்ளி கட்டும் பணி நேற்று தொடங்கியது.

ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.  அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரி கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார். இன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்– 2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.

ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது.
எனவே இந்த பள்ளியை கட்டுகிறேன். நான் தான் சரியாக படிக்கல... படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார் ராகவா லாரன்ஸ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக