வெள்ளி, 27 மே, 2016

நடிகை சமந்தா நாக சைதன்னியாவை திருமணம் செய்கிறார்

நடிகை சமந்தா நடிகர் நாக சைதந்நியாவை கல்யாணம் செய்கிறார். நாக சைதன்னியா நடிகர் நாக அர்ஜுனாவின் முதல் தாரமான தயாரிப்பாளர் ராம நாயுடுவின் மகளாகும். நாகர்ஜுனா பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகனாகும். ஆக மொத்தம் இருபெரும் திரை ஜாம்பவன்களின் பேரனை சமந்தா கரம்ப்டிக்கிறார். வாழ்க வளமுடன் .    ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு சமந்தா அளித்த பேட்டியில், தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று கூறியிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்தப் பேட்டி குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தா விளக்கம் அளித்தார் அதில், நான் சொல்லும்வரை திருமணம் பற்றிய பேச்சே கிடையாது என்று கூறியிருந்தார்.
தற்போது, சமந்தாவின் காதலர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன், நாக சைதன்யா தான் சமந்தாவின் காதலர் என்று சொல்லப்படுகிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வடிவத்தில் சமந்தாவும் நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்தார்கள். அதிலிருந்து இருவரும் நண்பர்களாகி பிறகு காதலர்களாகவும் மாறியுள்ளார்கள். விரைவில் இருவரும் திருமணம் பற்றிய தகவலை வெளியிடுவார்கள் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன  தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக