புதன், 18 மே, 2016

சு.சாமி : ரிசேர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்யவேண்டும்.. அவர் அமெரிக்க குடியுரிமை....


ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு, டெல்லி மேல்-சபை எம்.பி.யும், பா.ஜனதா தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியசாமி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள ரகுராம் ராஜன், மனோரீதியாக முழுமையான இந்தியராக இல்லை. இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பதிலாக, வேண்டும் என்றே அதை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை அதிகரிக்கலாம் என்கிற அவருடைய சிந்தனையும் ஆபத்தானது. மேலும், கடந்த 2 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டது. எனவே அவரை உடனடியாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும்.  இந்த  பார்பானுக்கு( தமிழ் அய்யர்)  அந்த பார்ப்பானை( தமிழ் அய்யங்கார்)  பிடிக்காதது ஏன்? உள்குத்து ஒன்று இருக்கிறது விரைவில் வெளியே வரும் ... இருவருமே அமெரிக்க காப்பரெட் இந்தியர்கள் ..


இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

பன்னாட்டு நிதியத்தின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டவர் என்பதும், அவருடைய பதவி காலம் நீட்டிக்கப்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக