ஞாயிறு, 1 மே, 2016

கோவை காதலர்கள் திருப்பதியில் தற்கொலை...சிரித்துகொண்டே செல்பியும் எடுத்துள்ளனர்

தற்கொலை செய்வதற்கு முன்பு “சிரித்துக்கொண்டே” வாக்குமூலம் கொடுத்துவிட்டு தூக்கில் தொங்கி இறந்த இளம் காதலர்கள்-
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கோவையை சேர்ந்த காதல் ஜோடி உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள ராம்பகிஜா பக்தர்கள் ஒய்வு அறையில் உள்ள 384-ஆம் அறையில் இருந்து, நேற்று பிற்பகலில் கடும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கே இளம் பெண்ணும், இளைஞர் ஒருவரும், துப்பட்டாவில் தூக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருந்தனர். தற்கொலை செய்து கொண்ட பெண், கோவை கலைஞர் நகரை சேர்ந்த சத்தியவாணி என்பதும், அந்த இளைஞர் பெயர் சம்பத்குமார் என்பதும் தெரிய வந்தது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் சத்தியவாணியின் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திருப்பதிக்கு வந்து திருமணம் செய்துகொண்டு பின்னர் இந்த தற்கொலை முடிவுக்கு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தங்களது உடல்களை ஒன்றாக புதைக்க வேண்டும் என்று உருக்காமான கடிதம் எழுதி வைத்துள்ள அந்த ஜோடி தங்கள் சாவிற்கு காரணமாக உள்ளவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க செய்ய வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. தற்கொலை செய்வதற்கு முன்பு இருவரும், செல்போனில் செல்ஃபி எடுத்து கொண்டதுடன், வீடியோவில் இன்னும் சில நிமிடங்களில் இருவரும் இறந்து போய்விடுவோம் என கூறிவிட்டு உயிரை மாய்த்து கொண்டதும் பதிவாகி இருந்தது. எழுமலையான் கோவிலுக்கு அருகே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. n7.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக