செவ்வாய், 3 மே, 2016

'தினமலர் - நியூஸ் 7' இணைந்து நடத்திய கருத்து கணிப்பு...ஒரு அலசல்

வழக்கமாக இத்தகைய கருத்துக்கணிப்புகளில், ஒவ்வொரு தொகுதிக்கும், 100 வாக்காளர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்படும். 'தினமலர் - நியூஸ் 7' கருத்துக்கணிப்பில், ஒவ்வொரு தொகுதியிலும் 1,000 வாக்காளர்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டன. ஆக, தமிழகத்தில் மொத்தம், 2,34,000 வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. புதுச்சேரியில், ஒவ்வொரு தொகுதியிலும், தமிழகத்தை ஒப்பிடுகையில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், தொகுதிக்கு, 500 வாக்காளர்கள் என, 15,000 பேரிடம் கருத்து சேகரிக்கப்பட்டது. அணுகுமுறை அதில், இரண்டு கட்சிகள் அல்லது கூட்டணிகளை தேர்வு செய்திருந்தவர்களின் கருத்துக்கள், செல்லாத வாக்காக கருதப்பட்டது. தமிழகத்தில் மீதம் இருந்த 2,02,993 சரியான வாக்குகளையும், புதுச்சேரியில் 11,630 சரியான வாக்குகளையும் வைத்து புள்ளி விவரங்கள் இறுதி செய்யப்பட்டன.இந்த பணியில், தொழில்முறை கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படவில்லை. இதற்கு, அணுகுமுறை வேறுபாடுகள் காரணம். 'தினமலர்' மற்றும், 'நியூஸ் 7' குழுவினர் இந்தபணியில் நேரடியாக ஈடுபட்டனர். சில தொகுதிகளில், செய்தித்தாள் விற்பனை முகவர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்களின் உதவி இருந்தது.

கருத்துக்கணிப்பு படிவம், 'இன்லேன்ட் லெட்டர்' வடிவத்தில், உள்ளிருக்கும் விஷயம் வெளியே தெரியாத படி, தாளின் இரு ஓரங்களையும் ஒட்டும் ஒவ்வொரு தொகுதியிலும், இல்லத்தரசிகள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை
சார்ந்தவர்கள், பல்வேறு வயதினர்என, பலதரப்பட்ட வாக்காளர்களை, பரவலாகச் சென்று, 'தினமலர் - நியூஸ் 7' குழுவினர் சந்தித்தனர்.
வசதியோடு அச்சடிக்கப்பட்டது. அந்த படிவத்தை வாக்காளர்களே தான் நிரப்பி, ஒட்டினர்.
அப்படி ஒட்டப்பட்ட படிவத்தை மட்டுமே 'தினமலர் - நியூஸ் 7' குழுவினர் சேகரித்தனர். அதனால், கருத்து சேகரித்தவர்களுக்கு, வாக்காளர்களின் தேர்வுகள் தெரியாது.தேர்தலுக்கு முன், ஒவ்வொரு காலகட்டத்திலும், வாக்காளர்களின் மனநிலை ஒவ்வொரு மாதிரி இருக்கும். உதாரணத்திற்கு, இரண்டு மாதங்களுக்கு முன் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு இருந்தால், பெரும்பாலான தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு சாதகமான நிலை இருப்பதாக தோற்றம்
ஏற்பட்டு இருக்கும்.இந்த கருத்துக்கணிப்பு தமிழ் புத்தாண்டுக்கு பின் துவங்கப்பட்டு, ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டது. மேலும் தாமதித்து இருந்தால், இன்னும் துல்லியமான நிலை கிடைத்திருக்கும். ஆனால், முடிவுகளை தொகுத்து வெளியிடுவதற்கு நேரம் இருந்திருக்காது.
வாசகர்கள் கவனம் கொள்வது மிகவும் அவசியம்


'தினமலர் - நியூஸ் 7' குழுவினரின் கணிப்புப் படி, இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்ட காலகட்டம், இறுதி நிலையை நோக்கி போக்குகள் மாறத் துவங்கி
இருந்த பருவம். கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டும் போக்கு தேர்தல் வரை தொடரலாம், வலுப்பெறலாம், வலுவிழக்கலாம் அல்லது முற்றிலும் மாறலாம். தேர்தலை ஒட்டி
உருவாகும் போக்கு, இந்த கருத்துக்கணிப்பு நடந்த காலகட்டத்தில் இருந்து, முற்றிலும் மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என,
வரலாற்று ரீதியான ஆதாரம் இருந்தாலும், இதில் வாசகர்கள் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.கருத்துக்கணிப்பு, புள்ளிவிவர சேகரிப்பில் ஒரு சில குறைபாடுகள் இருப்பதும் இயல்பே. அதை போல், இந்த கருத்துக்
கணிப்பில் முக்கியமான குறைபாடுகள்:
1. தொழில்முறை கருத்துக்கணிப்பு நிறுவனங்களிடம் வாக்காளர்கள் தெரிவிக்கும் கருத்து, அவர்கள், ஊடகம் சார்ந்த நபர்
களிடம் தெரிவிக்கும் போது மாறுமா என, தெரியவில்லை.
2. பெரும்பாலான தெகுதிகளில், ஆண்களே கருத்து தெரிவிக்க அதிகம் முன்வந்தனர். அதனால், கருத்து தெரிவித்தவர்களில், சராசரியாக, 30 சதவீதம் பேர் தான் பெண்கள்.
இதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடைசியாக வாசகர்கள் மனதில் கொள்ள வேண்டியது; இந்த கருத்துக்கணிப்பு காட்டும் போக்கில் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றலாம். அதை முற்றிலும் ஒதுக்கிவிடுங்கள்; ஏனெனில் தேர்தல் என்பது ஜெயிக்கும் குதிரையின் மேல் பந்தய பணம்
கட்டுவது போன்றது அல்ல.

தேர்தல், நம் அரசியல் விருப்பு வெறுப்புகளை தெரிவிப்பதற்கான ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, தமிழகத்தின் ஆட்சியாளர்களை மட்டும் அல்ல, அரசியல் சூழலையும் முடிவு செய்யும் நிகழ்ச்சி. குறைந்த வாக்குகள் அல்லது குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் ஜெயித்து வரும் கட்சி, அலையில் ஜெயித்து வரும் கட்சியை விட, இன்னும் கவனமாக ஆட்சி செய்யும் என்பது நிதர்சனம்.

அந்த வகையில், இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரம் வெளியாக உள்ள இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகள், உங்கள் தகவலுக்காக மட்டும், தேர்வை மாற்றியமைப்பதற்காக அல்ல.

சதவீதமும், சதவீத புள்ளியும்


கருத்துக்கணிப்பு முடிவுகளில், சதவீத குறியீடு % பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் '% புள்ளி' என்ற குறியீடும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. '% புள்ளி' என்பது, ஒரு சதவீத அளவீட்டில் இருந்து இன்னொரு சதவீத அளவீட்டை கழிக்கும் போது கிடைக்கும் அளவீட்டை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, 2011 சட்டசபை தேர்தலில், ஒரு தொகுதியில், ஒரு கட்சி 65 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது, கருத்துக் கணிப்பின் படி, இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு 45 சதவீத வாக்குகள் கிடைக்கும் என தெரிந்தால், அந்த கட்சிக்கு, வாக்குகள் 20 சதவீத புள்ளிகள் குறையும் என தெரிவிக்கப்பட வேண்டும், என்பது புள்ளியியல் விதி.ஏன் வெறுமே 20 சதவீத புள்ளிகள் குறைந்திருப்பதாக தெரிவிக்கக் கூடாது? ஏனெனில், மேற்படி உதாரணத்தில், முதலில் அந்த கட்சி 100 வாக்குகளில் 65 வாக்குகளை பெற்றிருந்தது, இதில் 20 சதவீதம் குறையும் என்றால், நுாற்றுக்கு 13 வாக்குகள் தான் குறையும். ஆனால், குறைந்திருப்பதோ நுாற்றுக்கு 20 வாக்குகள்! இதை தவிர்க்கவே சதவீத புள்ளி என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு -துணை ஆசிரியர், தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக