செவ்வாய், 31 மே, 2016

தயாரிப்பாளர் ஆபாவானனுக்கு 5 ஆண்டுகள் சிறை

விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள், செந்தூரப்பூவே உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவர் ஆபாவாணன். வங்கி காசோலை மோசடி வழக்கில் இவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆபாவாணனுக்கு சிறை தண்டனையோடு 2 கோடியே 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது சென்னை சிபிஐ நீதிமன்றம். மோசடிக்கு உடந்தையாக இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளருக்கு 15 லட்சம், உதவி மேலாளருக்கு 10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 1999ல் சென்னை கதீட்ரல் சாலை பஞ்சாப் நேஷனல் வங்கி்யில் கணக்கு தொடங்கினார். அவர் வங்கிச்சலுகையை தவறாகப்பயன்படுத்தி 3.31 கோடி ஏமாற்றியதாக ஆபாவாணன் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. வங்கியின் மேலாளர் ராஜகோபால், உதவி மேலாளர் ராமானுஜம் ஆகியோர் மீதும் சிபிஐ வ ழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக