திங்கள், 16 மே, 2016

73.76 சதவீதம் வாக்குப்பதிவு தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தல்: பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 63.70 சதவீதம் வாக்குப்பதிவுLalte news :தமிழகத்தில் 73.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 55.27 சதவீதம் வாக்குப் பதிவாகியுள்ளது என்றும் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் 88.50 சதவீதம் பதிவாகியுள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி தகவல் தெரிவித்துள்ளார். நகர்ப்புறங்களை விட கிராமங்களில் அதிக வாக்குகள் பதிவானதாக அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தொகுதியில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக லக்கானி தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி 63.70 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், பிற்பகல் 3 மணி நேர நிலவரப்படி தமிழகம் முழுவதும் 63.70 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 70 சதவீத வாக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளது. அடுத்து பெரம்பலூர் 68.66 சதவீதம், ஈரோடு 66.70 சதவீதம், தருமபுரி 64 சதவீதம், புதுக்கோட்டை 64.60, தேனி 63.73 சதவீதம், சேலத்தில் 63.16 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


மேலும்,  கிருஷ்ணகிரி 61.17 சதவீதம், ஈரோடு சதவீதம், திருப்பூர் 59.57 சதவீதம், கடலூர் 54.74 சதவீதம், நீலகிரியில் 58.28 சதவீதம், திருவாரூரில் 62.73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் 60.99 சதவீதம், திருச்சி 59 சதவீதம், காஞ்சிபுரம் 59 சதவீதம், நெல்லையில் 59.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், நாகையில் 60 சதவீதம், சிவகங்கை 58.06 சதவீதம், ராமநாதபுரம் 52.60 சதவீதம், திருப்பூர் 59.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பிற்பகல் 3.30 மணி நேர நிலவரப்படி 70 சதவீதம் வாக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ளது. கேரளாவிலும் 3 மணி நேர நிலவரப்படி 60 சதவீதம் அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக