ஞாயிறு, 22 மே, 2016

ஆறு கண்டெய்னர் லாரிகள் தப் பித்துவிட்டன. மொத்தம் 1500 கோடி ரூபாய் பிடிபட்டிருக் கிறது'

vikaran.com மர்ம கண்டெய்னர்களும் அதில் இருந்த 570 கோடி ரூபாய் யாருடையது என்ற ரகசியமும் தொடர்கின்றன. கோவை தீயணைப்புத் துறைக்கு எதிரே உள்ள ஸ்டேட் பாங்க் அலுவலகத்திற்குள் சரியாக காலை 6.45 மணிக்கு வந்தடைந்தது. அவற்றை பின்வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு பணத்தை எண்ணத் தொடங்கிவிட்டது மத்திய அரசின் வருமான வரித்துறை.உண்மையில் 570 கோடி ரூபாய் விவகாரத்தில் என்னதான் நடந்தது என ஸ்டேட் வங்கி அதிகாரி களைக் கேட்டோம்.
""ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்பது இந்தியாவில் மட்டுமல்ல...  36 வெளிநாடு களில் இயங்கும் நம் நாட்டு வங்கி. இந்த வங்கிதான் தமிழகத்தில் மாநில அரசாங்கத்தின் கணக்குகளைப் பராமரிக்கிறது. தமிழக அரசு திட்டங்களுக்குத் தேவையான நிதி இந்த வங்கி மூலம்தான் தரப்படு கிறது. ஊழல், லஞ்சம் எதுவாக இருந்தாலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உதவி இல்லாமல் தமிழக அரசில் எதுவும் நடக்காது.

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய கம்பெனிகள் பல ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உதவியுடன் தான் இயங்கின. இப்படி சர்வதேச அளவில் தொடங்கி தமிழ்நாடு அரசைத் தொட்டு ஜெ.வுக்கு நெருக்கமாக இயங்கும் வங்கிதான் இந்த வங்கி. 9,000  கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய குற்றச் சாட்டுக்குள்ளான விஜய் மல்லையாவுக்கு அதிக கடன் கொடுத்த வங்கி இந்த வங்கிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

;அதேபோல் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் வங்கி என முத்திரை குத்தப்பட்டுள்ள வங்கிகளில் இதுவும் ஒன்று. வங்கி வட்டாரத்தில் பெரிதும் விவாதிக் கப்படும் வங்கிகள் இணைப்பு என்பதில் தொடர் புடையதும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாதான்.t;">மிகவும் நஷ்டத்தில் இயங்கும் இந்த வங்கி யோடு சில வங்கிகளை இணைக்க இந்திய நிதி யமைச்சர் அருண்ஜெட்லி முன் மொழிந்திருக்கிறார். இப்படி ஜெ., ஜெட்லி ஆகிய இருவரு டன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த வங்கியின் இயக்குநர்கள் குழுமம் நினைத் தால் எது வேண்டுமென்றாலும் நடக்கும். அது எப்படி வேண்டு மென்றாலும் நடக்கும்'' என்ற அவர்கள் 570 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக சில ஆவணங்களையும் கொடுத்தார்கள்.

அதில் இடம்பெற்ற முதல் கடிதம் இந்தப் பண பரிமாற்றம் பற்றிய உண்மையை விளக்குகிறது.

(ஆவணம் : 1);;ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னம் பாலாஜி நகரில் இயங்கும் சிறப்பு  பண சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவசர அவசர மாக ரூ.570 கோடி அனுப்பப்பட்டது என்கிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வின் விளக்கத்தை பொய் என காட்டு கிறது
 இந்தக் கடிதம். 570 கோடி ரூபா யுடன் கண்டெய்னர் லாரிகள் பிடிபட்ட வுடன் வங்கி அதிகாரிகளால் இது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் பணம் என அறியப்பட்ட இந்த ஆவணத்தில், மார்ச் மாதம் 23-ஆம் தேதி விசாகப்பட்டினம் பண சேமிப்பு நிர்வாகக் கிளை தமக்கு 570 கோடி பணம் வேண்டும் என கடிதம் அனுப் பியதாகவும், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கி உரிய அனுமதி கொடுத்துவிட்டதாகவும், பணத்தை உரிய பாதுகாப்புடன் எடுத்துச் செல்லுங்கள் என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உதவி பொதுமேலாளர் எழுதிய கடிதம்தான் அந்த ஆவணம்.
/மே மாதம் 6-ந் தேதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாகத்தான் 11-ஆம் தேதி தே.சூரிகுமார் ரெட்டி என்கிற அதிகாரியை கோவைக்கு அனுப்பி வைத்ததாகவும் 2-ஆவது கடிதம் சொல்கிறது. ;

(ஆவணம் : 2) 11-ஆம் தேதி வரவேண்டிய சூரிகுமார் ரெட்டி 13-ஆம் தேதி நள்ளிரவு ஏன் வந்தார். 2 நாள் தாமதத்திற்கு என்ன காரணம்? கடந்த மார்ச் மாதம் பணம் வேண்டும் என விசாகப்பட்டினம்   கிளை கடிதம் அனுப்புகிறது. அதற்கு மே மாதம் 6-ந் தேதி ""நாங்கள் தயார், நீங்கள் கேட்ட தொகையை அனுப்புகிறோம்'' என கோவை கிளை சொல்கிறது. அதைப் பெற்றுக்கொண்டு விசாகப்பட்டினம் செல்ல 11-ஆம் தேதி அனுப்பப்பட்ட சூரிகுமார் ரெட்டி 2 நாட்கள் தாமதமாக அந்தப் பணத்தை 3 கண்டெய்னர் லாரிகளில் சீல் வைக்கப்படாத பூட்டுகளுடன் லுங்கி அணிந்த போலீசாருடன் ஏன் செல்ல வேண்டும்? அந்த லாரியில் இடம்பெற்ற போலீசார் உண்மையான போலீசாரா? அப்படி அவர்கள் உண்மையான ஆந்திர மாநில காவலர்களாக இருந்தாலும் வாடகை போலீசார் அழைத்து  வரப்பட்டிருக்கலாம் அல்லவா? இந்த சந்தேகத்துடன்தான் வருமானவரித்துறை, அவர்களை கேள்வி கேட்கத் தொடங்கியது எனச் சொல்லும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு அதிர்ச்சிகரமான ஆவணத்தை நமக்கு அளித்தார்கள். (ஆவணம் : 3)அந்த ஆவணத்தில் 3 கண்டெய்னர்களில் 1,000 ரூபாய் நோட்டுகள் 2,000 பண்டல்கள், 500 ரூபாய் நோட்டுகள் ஒரு லட்சத்து ஆயிரம் பண்டல்கள், 100 ரூபாய் நோட்டுகள் 45,000 பண்டல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 48,000 பண்டல்கள் அனுப்பப்பட்டன.

"ஒரு லட்சத்து 48,000 ரூபாய் நோட்டு பண்டல்களை ஒரே கண்டெய்னரில் அனுப்பாமல் மூன்று கண்டெய்னர்களில் அனுப்பியது ஏன்?' என கேள்வி எழுப்பும் அதிகாரிகள், "570 கோடி ரூபாயை கொண்டு சென்ற சூரிகுமார் ரெட்டி 13/2016-17 என்கிற ஒரு இன்வாய்ஸை வைத்திருந்தார். அதில் போடப்பட்டிருந்த தேதி 13-12-2016 என குறிப்பிடப்பட்டிருந்தது. 29-04-2016 அன்று ரிசர்வ் வங்கி கோவை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து 570 கோடி ரூபாயை ட்ரிமுல் ஜெர்ரி என்ற இடத்திலுள்ள மற்றொரு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்கு அனுப்ப அனுமதி கொடுத்த உத்தரவின் அடிப்படையில்... வருகிற டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி கொண்டு செல்லும்படி ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கோவை கிளை கொடுத்த இன்வாய்ஸை வைத்துக்கொண்டுதான் சூரிகுமார் ரெட்டி 570 கோடி ரூபாய் கொண்டு சென்றார். ;டிசம்பர் மாதத்திற்குப் போகவேண்டிய பணத்தை முன்கூட்டியே ஆறு மாதத்திற்கு முன்பு மே மாதமே எப்படி கொண்டு செல்ல முடியும்? என கேள்வி எழுப்புகிறார்கள் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள். அத்துடன் விசாகப்பட்டினம் கிளைக்குச் செல்ல வேண்டிய பணம் எப்படி ட்ரிமுல் ஜெர்ரி என்கிற ஊருக்கு  கொண்டு செல்லப்படுவதாக -தவறாக குறிப்பிட முடியும். உண்மையில் எந்த ஊருக்கு 570 கோடி ரூபாய் அனுப்பப் பட்டது?' என கேட்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள்.கண்டெய்னர் லாரி களில் போனது வெறும் 570 கோடி ரூபாய் பணம் அல்ல. தமிழக தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட நிறுத்தச் சொன்னபோது நிறுத்தாமல் சென்றதால் அவர்கள் விரட்டிக் கொண்டு போனபோது, ஒரு பெட் ரோல் பங்க்கில் டீசல் நிரப் பிக்கொண்டிருந்த 3 லாரி களைத்தான் பிடித்தார்கள். அவர்களிடம் சிக்காமல் ஆறு கண்டெய்னர் லாரிகள் தப் பித்துவிட்டன. மொத்தம் 1500 கோடி ரூபாய் பிடிபட்டிருக் கிறது'' எனச் சொல்லும் அதி காரிகள்,
இந்த கண்டெய்னர் லாரிகள் எல்லாம் கரூர் அன்புநாதனின் ஏற்பாட்டில் வந்த திருட்டு நம்பர் பிளேட் லாரிகளாக இருக்கும் என சந்தேகப்படுகிறோம். இதைப் பற்றி விசாரித்தால் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும்'' என்கிறார்கள்.
லாரிகளின் டிரைவர் களாக வந்த வடநாட்டு வாலிபர்களுக்கு தமிழக போலீசார் ராயல் சல்யூட் அடித்து சாப்பாடு, சரக்கு என வாங்கிக் கொடுத்து அந்தப் பகுதி மக்களிடம் பேசாதே என மறைத்து வைத்து உபசரித் தது பல சந்தேகங்களை உருவாக்குகிறது'' என்கிறார் கள்.தாமோதரன் பிரகாஷ், அருள்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக