ஞாயிறு, 29 மே, 2016

புதுச்சேரி கோயில் தேர் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 10 பேர் காயம் ...திரவுபதி அம்மன்

படம்: செ.ஞானப்பிரகாஷ்
புதுச்சேரி திரவுபதி அம்மன் கோயில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
புதுச்சேரி கதிர்காமத்தில் திரவுபதி அம்மன் கோயில் தேர் திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. தேர் திடீரென நிலைகுலைந்து கவிழ்ந்ததில் தச்சுத் தொழிலாளி சரவணன் (45) சம்பவ இடத்திலேயே இறந்தார். 10 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.
தேர் விபத்து சம்பவம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீடு அமைந்துள்ள தெருவுக்கு அடுத்த தெருவில் நடந்துள்ளது.   படம்: செ.ஞானப்பிரகாஷ்  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக