ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மக்கள் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்....விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்...MDMK யின் கைங்கரியத்தால் MDMDK ஆகிவிட்ட DMDK


vikatan.com :தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும், விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணிக்கு அழைத்தனர். இந்த சூழ்நிலையில், தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். இந்த அறிவிப்பு தி.மு.க.வினரையும், தே.மு.தி.க.வினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பல மாவட்டச் செயலாளர்கள் முதல் வட்டச் செயலாளர்கள் வரை பின்வாங்கினர்.
இந்த நிலையில், ஏற்கனவே கூட்டணிக்கு வருமாறு நேரில் சென்று அழைத்த மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கு விஜயகாந்த் திடீரென அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், தே.மு.தி.க - மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி வைக்கப்பட்டதாக தே.மு.தி.க தரப்பில் தெரிவிக்கப்பட்டதோடு, விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆமா  ஆமா அவருதான் தமிழ்நாட்டு செங்கிஸ்கான்,லெனின்,சே குவேரா எல்லாம்.... 


இந்த கூட்டணி அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த தே.மு.தி.க.வினர், தாங்கள் ஏற்கனவே கட்டியிருந்த பணத்தை தலைமையிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதனிடையே, விஜயகாந்தின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட எம்.எல்.ஏ சந்திரகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன், சேகர், மூன்று மாவட்டச் செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, சந்திரகுமார் உள்பட போர்க்கொடி தூக்கிய அனைவரையும் கட்சியில் இருந்து விஜயகாந்த் நீக்கியதோடு, அன்றே நீக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கு புதியவர்களை நியமித்தார்.

இதையடுத்து, கட்சியில் இருந்து எங்களை நீங்கியது செல்லாது என்று சந்திரகுமார் கூறியதோடு, தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் கூட்டம் 10-ம் தேதி (இன்று) தியாகராய நகரில் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என சந்திரகுமார் ஏற்கனவே, அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று தே.மு.தி.க. அதிருப்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு சந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மக்கள் தே.மு.தி.க. என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தேமுதிக அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

விஜயகாந்த்தை என்றும் குறை சொல்ல மாட்டோம். தே.மு.தி.க.வை உடைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. வைகோவைப் போன்ற எண்ணம் எங்களுக்கு கிடையாது. மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.திக. இணைந்தது வருத்தமளிக்கிறது'' என்றார்.
படங்கள்: ஏ.முத்துகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக