புதன், 13 ஏப்ரல், 2016

JNU நுழைவுத் தேர்வு: ஓபிசி மாணவர்களுக்கு சலுகை கிடையாது...!!

டெல்லி: ஓபிசி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் சலுகை கிடையாது என்று ஜவஹர்லால் பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டில் எம்.பிஎல், பிஎச்.டி படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வை ஜேஎன்யூ நடத்தி வருகிறது. ஜேஎன்யு நுழைவுத் தேர்வு: ஓபிசி மாணவர்களுக்கு சலுகை கிடையாது...!! தற்போதைய நிலையில் ஓபிசி மற்றும் பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களை நுழைவுத் தேர்வில் பெற்றால் மட்டுமே சேர்க்கை என்ற விதியுள்ளது. அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றால் கூட சேர்க்கைக்கு இடமுண்டு என்ற நிலை உள்ளது. இதே நேரத்தில் ஓபிசி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு முடிந்த பின்னர், நேர்முகத் தேர்வில் 10 சதவீத சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 
இதனால் ஓபிசி மாணவர்கள் 36 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு இரண்டிலும் எங்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்று ஓபிசி மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதற்கு ஜேஎன்யூ நிலைக் குழு இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. ஒரே ஒரு நிலையில் (நேர்முகத் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வு) மட்டுமே சலுகை அளிக்க முடியும். இரண்டிலும் சலுகை அளிப்பது என்பது நியாயமாகாது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more at:://tamil.careerindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக