ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

குஜராத்தில் வன்முறை :இணையதள சேவை முடக்கம் Curfew clamped, internet services banned in Gujarat..Patel agitation


Patel agitation: Curfew clamped, internet services banned in Gujarat
ஆமதாபாத்: தேச விரோத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்திக் படேலை விடுதலை செய்ய வலியுறுத்தி மொதேரா என்ற இடத்தில் படேல் சமுதாயத்தினர் போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து இண்டெர்நெட் சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் படேல் சமுகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்கக வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்றது, மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பேராட்டத்தை தொடர்ந்து ஹர்திக் படேல் தேச துரோக குற்றச்சாட்டு அடி்ப்படையில் கைது செய்யப்ப்டடு சிறையி்ல அடைக்கப்பட்டார். தொடர்து அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வந்த நிலயில் தற்போது அச்சமூத்தினர் ஹர்திக் படேலை விடுதலை செய்ய வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து கூட்டமாக வந்த அவர்கள் மீது போலீசார் கண்ணணீர் புகை குண்டுகளை வீசினர். போலீசார் தடியடி நடத்தினர். சிறப்பு அதிரடிப்படை தலைவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 400 பேரை போலீசார் பிடித்து வைத்துள்ளனர். . ஆமதாபாத், சூரத், மேஷானா பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இதனிடையே மேஷானா பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வும் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் ஆமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் இண்டர் நெட் சேவையை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக