திங்கள், 18 ஏப்ரல், 2016

ஸ்டாலின் : எந்த பதவியும் வேண்டாம்...கலைஞரின் மகன் என்பதே போதும்!

கலைஞரின் மகன் என்கிற அங்கீகாரம் ஒன்றே போதும்; எனக்கு, எந்த பதவியும் தேவையில்லை,'' என, ஸ்டாலின் பேசினார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தி.மு.க., வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 501 வாக்குறுதிகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்ட அளவிலான தேவைகளை நிறைவேற்றும் வகையில், அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கு முடியாது என்று சட்டசபையில் கூறிய ஜெயலலிதா, இப்போது, படிப்படியாக குறைக்கிறோம் என்கிறார்.>எனக்கு எந்த பதவியும் தேவையில்லை;
கலைஞர்  கருணாநிதி மகன் என்கிற அங்கீகாரம் போதும். உடல் நலன் உள்ளிட்ட எதையும் பொருட் படுத்தாமல், மக்களுக்காக உழைக்கும் தலைவரின் மகன் என்பதில் பெருமைப்படு கிறேன்.
இந்த ஆட்சியாளர்களுக்கு, விவசாயி கள், கைத்தறி, விசைத்தறியாளர்கள் என, யாரையும் பிடிக்கவில்லை. 2011ல் ஜெ., தனது தேர்தல் அறிக்கையில், விசைத்தறிக்கு ஜவுளி சந்தை, கோழி ஆராய்ச்சி மையம், பி.ஏ.பி., குளம், குட்டை சீரமைக்கப் படும் என்றார்; ஆனால், செய்யவில்லை. தி.மு.க., ஆட்சி அமைந்தபின், பல்லடத்துக்கு 'ரிங்' ரோடு அமைக்கப் படும்; விசைத்தறி ஜவுளி சந்தை, கோழி ஆராய்ச்சி மையங்கள் அமைப்போம்.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


பேசி முடித்தபின், கூட்டத்தினரை பார்த்து ஸ்டாலின், 'நிச்சயமாக, உறுதியாக, சத்தியமாக வெற்றி பெறச் செய்வீர்களா' என, வாக்குறுதி வாங்கிக் கொண்டு புறப்பட்டார். முன்னதாக, உடுமலையில் வேட்பாளர் முத்துவை ஆதரித்து ஸ்டாலின் பேசுகையில், ''சொன்ன வாக்குறுதிகளையும், சொல்லாத வாக்குறுதி களையும் நிறைவேற்றியதாக, ஜெ., பொய் சொல்கிறார்.

நான் ஹெலிகாப்டரில் வந்து உங்களிடம் பேச வில்லை. சைக்கிள், மோட்டார் பைக், நடை பயணமாக வந்து, பிரச்னைகளை கேட்டறிந்து சென்றேன். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், அப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

'புதிய தொழில் துவங்க மூன்று மாதங்களில் அனுமதி' உடுமலை மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணனை ஆதரித்து, ஸ்டாலின் பேசுகையில்,''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்களுக்கு கூடுதலாக இலவச மின்சாரம் வழங்குவோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், புதிய தொழில்களுக்கு மூன்று மாதங்களில் அனுமதி வழங்கப்படும். விண்ணப்பித்து மூன்று மாதங்களுக்கு பிறகும், அனுமதி கிடைக்க காலதாமதம் ஏற்பட்டால், அனுமதி பெற்றதாக நினைத்து தொழில் தொடங்கலாம்,'' என்றார்.

என்ன பொருத்தம்... ஸ்டாலின் பாட்டு! அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தி.மு.க., வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து, அக்கட்சி பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இதில், எந்த மாற்றமும் கிடையாது.

உங்கள் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் ஆனந்தன், இதே தொகுதியில், 1996 தேர்தலில் வெற்றி பெற்ற இளங்கோவின் மகன்.அவரது வாரிசுக்காக, கருணாநிதியின் வாரிசான நான், ஓட்டு கேட்டு வந்துள்ளேன். 'என்ன பொருத்தம்... ஆஹா... நமக்குள் என்ன பொருத்தம்?' என்ற பாட்டு தான் நினைவுக்கு வருகிறது. ஆனந்தனை வெற்றி பெற வைக்க வேண்டியது, உங்கள் பொறுப்பு. இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.

-நமது நிருபர் குழு-  தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக