வெள்ளி, 1 ஏப்ரல், 2016

வளர்மதி: ராமஜெயம் கொலை ஒரு கவுரவ கொலை.......

திருச்சி: ராமஜெயம் கொலை எதுக்காக நடந்தது தெரியுமா? அது ஒரு கவுரவக் கொலை என்று அமைச்சர் வளர்மதி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமலும், கொலையாளிகளின் நிழலையும் கூட நெருக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் தடுமாறிக்கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர்தான் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை அனுசரித்தனர் ராமஜெயத்தின் ஆதரவாளர்கள். இந்த அரசியல் கொலைக்கு முன்பகைதான் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இல்லை இல்லை தொழிற்போட்டி காரணமாக இருக்கலாம் என பல யூகங்கள் உலா வருகின்றன. இதுவரை கொலைக்கான உண்மையான காரணம் என்னவென்பதும், உண்மையான குற்றவாளி யார் என்பதும் கண்டறியப்படவில்லை. ராமஜெயத்தின் 4ம் ஆண்டு நினைவு நாள் அன்று திருச்சி உறையூரில் தேமுதிக தேர்தல் விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இந்த நாளில்தான் நான்கு வருடங்களுக்கு முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் வெட்டிக்கொல்லப்பட்டார். ஆனால் அந்த கொலைக்கான காரணத்தை இன்றுவரை கண்டறிய முடியவில்லை, என்று கூறினார்
யாரு கறுப்பு எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் சினிமாவில் கூட பெண்களை அவமதிக்க மாட்டார். குடிக்க மாட்டார். ஆனால் யாரு வந்து எம்.ஜி.ஆர் பேரை சொல்லி பேசுவது. ஒரு தகுதி வேண்டாமா? என்று சாடினார் வளர்மதி.
ஆணவக்கொலை ராமஜெயம் கொலை எதற்காக நடந்தது தெரியுமா? அது ஒரு கவுரவக்கொலை. அது தெரியுமா?. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே கெட்டு போயிருக்கிறது. அம்மா அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா
அமைச்சர் சொல்வது உண்மையா? ராமஜெயம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதும், கொலையாளி யார் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த நிலையில், ராமஜெயம் கொலை, ஒரு கவுரவக்கொலை என்று அமைச்சர் ஒருவரே பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக