சனி, 9 ஏப்ரல், 2016

வாரிசுகள்.... தமிழக காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் பெருமளவில் சீட்டு வேட்டை

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், முதல் கட்டமாக, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின், இரண்டாவது கட்டமாக, தொகுதி பங்கீடு உறுதி செய்வது குறித்து, கருணாநிதி யுடன் காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. தோல்வி, தொண்டர்கள் மத்தியில் எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. எதையும் எதிர்பார்க்காத தொண்டர்களுக்கு அது ஏமாற்றத்தையும் தரவில்லை. ஆனால், எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கோஷ்டி தலைவர்கள் தான், தி.மு.க., கூட்டணியை முறித்துக் கொள்ளக் கூடாது என்பதில், ஒருமித்த கருத்துடன் கூடி ஆலோசித்தனர். அதன் விளைவு, தனித்து போட்டியிட விரும்பிய காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் மனதை, கோஷ்டி தலைவர்கள் கரை கரை என கரைத்தனர். இதற்கு முக்கிய காரணம், வாரிசுகளை தலைதுாக்கி விடும், 'பொறுப்புள்ள அப்பாக்களாக' நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.   கட்சிக்காக பல வருடம் உழைத்த அடிமட்ட தொண்டனுக்கு இப்பொழுதாவது உறைத்தால் நல்லது....அவனவன் கோடீஸ்வரன் ஆயிட்டான் நீ இப்பவும் போயி கொடி பிடிசுகிட்டு நாதாரி 
அதனால் தான் மூன்றாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு தொலைபேசி வாயிலாக நடந்து முடிந்து, அதில் சின்ன சிராய்ப்போ, சேதாரமோ ஏற்படாமல், சுமுகமாக பேசி முடித்துள்ளனர். 



இனி விஷயத்திற்கு வருவோம்...
காங்கிரஸ் என்றாலே, வேட்டி கிழிப்பு கோஷ்டி சண்டை நினைவுக்கு வருவது போல வாழையடி வாழையாக, வாரிசு அரசியலும் தழைத்தோங்கி வளருகிறது. நேரு- இந்திரா, லால்பகதுார் சாஸ்திரி - அனில்சாஸ்திரி, இந்திரா - சஞ்சய், ராஜிவ், ராஜேஷ் பைலட் - சச்சின் பைலட்,
சோனியா - ராகுல் போன்றவர்கள் விளங்குகின்றனர். அதேபோல, தமிழகத்திலும் வாரிசு அரசியலுக்கு பஞ்சமில்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மகன் திருமகன், தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் சமூகநல வலைதளங்களுக்கு பொறுப்பானவராக,தகவல் தொழில்நுட்ப துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார்.கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வரும் அவர், ஈரோடு, கோபி தொகுதியில் போட்டியிட வேண்டும் என,இளங்கோவனின் ஆதரவாளர்கள் விருப்பமனு அளித்துள்ளனர். இளங்கோவன் எம்.பி., தேர்தலில் போட்டியிட விரும்புவதால் திருமகன், சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.

பொருளாளர் நாசே ராமச்சந்திரன் மகன் நாசே ராஜேஷ் மதுரவாயல், விருகம்பாக்கம், திருத்தணி தொகுதியில், 'சீட்' கேட்டுள்ளார். இவர், மாநில இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக இருக்கிறார். இவரது தலைமையில் வேலைவாய்ப்பு முகாம், சமூக சேவைகள், அரக்கோணம் லோக்சபா தொகுதிகளுக்குள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலர் திருநாவுக்கரசரும், தன் மகன் ராமச்சந்திரனை,
அறந்தாங்கியில் களமிறக்க திட்டமிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவரும், தேனி முன்னாள் எம்.பி.,யுமான ஜே.எம்.ஆரூண் மகன் ஹசன்ஆரூண் அம்பத்துார் தொகுதியை கேட்டுள்ளார். இவர் தற்போது இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலராக இருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் டாக்டர் விஷ்ணுபிரசாத், ஏற்கனவே ஒரு முறை செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக பணியாற்றினார். தற்போது தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் பதவி வகித்து வருகிறார். இவர் செய்யாறு தொகுதியை கேட்டுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன், கடந்த லோக்சபா தேர்தலில், கடலுார் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என, வாழப்பாடிராமமூர்த்தியின் ஆதரவாளர்கள் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவின் மகன் கார்த்திக், மாணவர் காங்கிரஸ் மாநில நிர்வாகியாக அரசியலில் நுழைந்துள்ளார். சேலத்தில் போட்டியிடுவதற்கு, தங்கபாலு, டில்லியில் காய் நகர்த்த திட்டமிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், சேலம் தொகுதியை கேட்டுள்ளார். இவரும் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலராக உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மகன் ஜெயசிம்மன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். சிவகங்கை தொகுதிக்கு, 'சீட்' கேட்டுள்ளார். முன்னாள் எம்.பி., அன்பரசின் மகன் அருள் அன்பரசு ஏற்கனவே, சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக பணியாற்றியுள்ளார்.

இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் ஸ்ரீபெரும்புதுாரில் போட்டியிட்டுள் ளார். தற்போது மதுரவாயல் தொகுதியில், சீட் கேட்டுள்ளார். அன்பரசின் மூத்த மகள் சுமதி, தமிழக மகளிர் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ளார். அவர் அரக்கோணம் தொகுதியில், 'சீட்' கேட்டுள்ளார். இப்படி வாரிசுகளுக்கு, 'சீட்' கேட்டு, டில்லிக்கு படையெடுக்க அப்பாக்கள் திட்டமிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -   தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக