வியாழன், 7 ஏப்ரல், 2016

நடிகை சமந்தா படம் தயாரிக்க போகிறார்.......

ரஜினி, கமல் தொடங்கி விஷால், ஆர்யா, அருண்விஜய் என பல ஹீரோக்கள் சொந்த நிறுவனம் தொடங்கி படங்கள் தயாரிக்கின்றனர். ஹீரோயின்களை பொறுத்தவரை தயாரிப்பில் ஈடுபடுவது மிக குறைவு. ‘புன்னகை பூவே’ கீதா தற்போது பட தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். விசாகா சிங்கும் ெசாந்த படம் தயாரிக்க பேச்சு நடக்கிறது. இந்த பட்டியலில் இணைகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் சமந்தா விரைவில் சொந்த படம் தயாரிக்க முடிவு செய்துள்ளதுடன் அவரே ஹீரோயினாக நடிக்கிறார். கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான ‘யு டர்ன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார். இப்படத்தை கன்னடத்தில் பவன்குமார் இயக்கி இருந்தார். ஏற்கனவே இவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘லுசியா’ படத்தை இயக்கியவர். இப்படம் தமிழில் ‘எனக்குள் ஒருவன்’ பெயரில் ரீமேக் ஆகி இருந்தது. இதில் சித்தார்த் நடித்திருந்தார் தினகரன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக