செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வேட்பாளர்கள் சேஞ் மர்மம்.....மூன்றாவது அணி வேலைக்கு ஆவாத.......அப்செட்

"தோ ல்வி பயத்தை மறைத்து அதையே துணிச்சல் போல வெளிப்படுத்துவதில் ஜெ. எக்ஸ்பர்ட். 234 தொகுதிகளிலும் இரட்டை இலை யில் போட்டியிட முடிவு செய்ததன் பின்னணி இதுதான்'' என்கிற அ.தி.மு.க நிர்வாகிகளே, ""அதனால்தான் வேட்பாளர்கள் விஷயத்தில் வழக்கத்தைவிட அதிகம் கவனம் செலுத்துகிறார்'' என்கிறார்கள்.
""வேட்பாளர் பெயர்களை வெளியிட்ட அறிவிப்பு முதலில் ஜெ.வின் கையெழுத்தில்லாமல் வெளியானது. அத்துடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்களை ஜெ. சந்திக்கவும் மறுத்தார். அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் நூறுபேரை மாற்றுவதற்கான வேலைகள் போயஸ் கார்டனில் துரிதமாக நடைபெறுகிறது. அதற்கான ஒரு தனி அலுவலகத்தையே போயஸ் கார்டனில் திறந்து வைத்திருக்கிறார் ஜெ.'' என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.


கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 37 எம்.பிக்களை வென்றதுடன்  217 சட்டமன்றத் தொகுதிகளில் மற்ற கட்சிகளை விட அதிகமான வாக்குகளைப் பெற்றது. மொத்தம் 44 சதவிகித வாக்குகளையும் பெற்றது. இந்த முறை அதில் பத்து சதவிகிதம் வாக்குகள் குறையும் என்பது ஜெ.வின் கணக்கு. இந்த பத்து சதவிகிதம் வாக்குகள் தி.மு.க.விற்குப் போகுமானால் தி.மு.க. அமோக வெற்றி பெற்றுவிடுமே என்பதால் தான் உளவுத்துறைக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டு, மாற்று அணி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. அந்தக் கூட்டணியில் தே.மு. தி.க. சேர்ந்ததும் "கடந்த பாராளுமன்றத் தேர்தல் போலவே தி.மு.கவுக்கு வாக்குகள் போகாமல் தடுக்கும் வலுவான மூன்றாவது அணி உருவாகி விட்டது' என பெரிதும் மகிழ்ச்சியடைந்தார் ஜெ. ஆனால் அடுத்தடுத்து அவருக்கு வந்த சர்வே ரிப்போர்ட்டுகளும், களத்தில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கடும் போட்டி நிலவுகிறது என ஊடகங்களில் வெளிவந்த தகவல்களும் ஜெ.வின் கணக்குக்கு மாறாக அமைந்தன.இது குறித்து கடுமையாக யோசித்த ஜெ., தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள பலவீனமான கட்சிகள் பற்றிய ரிப்போர்ட்டுகளைக் கேட்டறிந் தார். காங்கிரசுக்கு 41 தொகுதிகள் என்ற தி.மு.கவின் ஒப்பந்தம் அ.தி.மு.க தலைமைக்கு உற்சாகத்தைத் தந்தது. 2011 அளவுக்கு வெற்றி இல்லாவிட்டாலும், தனி மெஜாரிட்டியுடன் (118 தொகுதிகளுக்கு மேல்) ஆட்சியமைக்க முடியும் என நம்புகிறார் ஜெ. அதற்கேற்ற வகையில் வேட்பாளர்கள் அமைய வேண்டும் என்பதால்தான் இத்தனை முறை வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்கிறார்கள் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள்.அறிவிக்கப்பட்ட வேட் பாளர்கள் பற்றி அ.தி.மு.க.வினர் அளிக்கும் புகார் களை கவனிக்க ஒரு சர்வே நிறுவன ஊழியர்களை நிரந்தரமாக போயஸ் கார்டனில் நியமித்தார் ஜெ. தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் அளவிலான வேட்பாளர்கள் பற்றிய புகார்களை அவர் கள் பரிசீலித்து சசிகலா விடம் அளிக்கிறார்கள். சசிகலா, ஜெ.விடம் இது குறித்து ஆலோசித்து  மாற் றப்பட வேண்டியவர்கள் யார் என்பதை முடிவு செய்கிறார். மாற்றப்படும் வேட்பாளருக்குப் பதில் யாரை நியமிக்கலாம் என தனது சொந்த பந்தங் களுடன் விவாதம் செய்து ஜெ.விடம் சொல்கிறார் சசிகலா. அதன்பிறகே வேட்பாளரை மாற்றம் செய்து ஜெ. அறிவிக்கிறா ராம். அப்படித்தான் முதன்முதலில் அருப்புக் கோட்டை வேட்பாள ராக முத்துராஜாவுக்குப் பதில் வைகைச்செல்வன் நியமிக்கப்பட்டார். இந் தத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் காண திட்டமிட்டிருந்த தி.மு.க. வி.ஐ.பி. கே.கே. எஸ்.எஸ்.ஆர். அ.தி.மு.க. மா.செ.யும் மந்திரியுமான ராஜேந்திர பாலாஜியுடன் மறைமுகமாக ஒரு டீல் போட்டிருக்கிறார். "அருப் புக்கோட்டை தொகுதியில் ஒரு டம்மி வேட்பாளரை நிறுத்துங்கள், ராஜேந்திர பாலாஜி போட்டியிடும் சிவகாசி தொகுதியில் ஒரு டம்மி வேட்பாளரை தி.மு.க. நிறுத்தும், நீங்கள் சிவகாசியில் வெற்றி பெறுங்கள் நான் அருப்புக்கோட்டையில் ஜெயிக்கிறேன்' என கே.கே.எஸ்.எஸ்.ஆர். போட்ட டீலை விருதுநகர் மாவட்ட ர.ர.க்கள் தலைமைக்கு அனுப்ப, இதை சசி, ஜெ.விடம் காட்ட... உடனே யாரைப் போடுவது என ஜெ. கேட்க, சசி வகையறாக்களிடம் சமீப காலமாக நெருங்கிப் பழகிய வைகைச்செல்வன் பெயரை சசி சொன்னார். அவர் வேட்பாளரானார். சி.ஆர்.சரஸ்வதி, ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு டிக்கெட் கிடைத்ததும் இந்த வழியில்தான்.அதேபோல் மன்னார்குடி வேட்பாளராக இருந்த சுதாவுக்குப் பதிலாக எஸ்.காமராஜும், வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியனும், திவாகரின் சிபாரிசின் அடிப்படையில் சசி சொன்னதை ஜெ. ஏற்றுக்கொண்டதால் வேட்பாளரானார்கள்.அமைச்சர் ஜெயபால் நாகை மா.செ. பொறுப்பில் இருந்தால் அவரது அரசியல் குருவான ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக செயல் படுவார். அதனால் வெற்றி பாதிக்கப்படும் என... nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக