ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

பிரேமலதா : தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் விஜயகாந்த் வீட்டின் வாசலில் நிற்க வேண்டியது வரலாம்...அப்போது ரேட் எவ்வளவாக இருக்கும்?

தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தே.மு.தி.க. மகளிர் அணி செயலர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுப்பேசினார். அவர், ‘’தே.மு.தி.க.வினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை, அவர்களாகவே வருகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூறியபடி, தானாகக் கரைவதற்கு தேமுதிக சோப்புக் கட்டியல்ல. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இரும்புக் கோட்டை. திமுக வீசும் மாய வலையில் தே.மு.தி.க.வினர் சிக்க மாட்டார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள் எத்தனைப் பேரிடம் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். ஸ்டாலின் பேசும் அனைத்து விவரங்களையும், கட்சியினர் எங்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால், விஜயகாந்த் வீட்டின் வாசலில் நிற்க வேண்டியது வரலாம். அதனால் மலிவான அரசியல் தேவையில்லை. பெயருக்கேற்றபடி, ஸ்டாலின் நடந்து கொள்ள வேண்டும்.

தே.மு.தி.க.வில் இருந்து விலகி திமுகவில் இணைவது பாழுங்கிணற்றை தேடிச் சென்று விழுவது போன்றதாகும். திமுக - காங்கிரஸ் கூட்டணியின் இமாலய ஊழலை மக்கள் இன்னும் மறக்கவில்லை. முதல்வராக விஜயகாந்த் பதவியேற்றவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்கும் திட்டம் முதலில் நிறைவேற்றப்படும்’’என்று தெரிவிவித்தார் nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக