செவ்வாய், 19 ஏப்ரல், 2016

விழுப்புரத்தில் திருநங்கைகள் குவிந்தனர்.....கூவாண்டவர் திருவிழா

விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை யொட்டி விழுப்புரம் நகரில் ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், கடந்த 5ம் தேதி சித்திரை திருவிழா, சாகை வார்த்தலுடன் துவங்கியது.
நாளை(19ம் தேதி) திருநங்கைககள் தாலி கட்டும் நிகழ்ச்சியும், 20ம் தேதி அரவாண் திருப்பலி மற்றும் தேர் திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க மும்பை, டில்லி மற்றும் சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள், விழுப்புரத்திற்கு வந்து தங்கி உள்ளனர்.
விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள லாட்ஜ்களில், திருநங்கைகளின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. விழுப்புரம் வந்துள்ள திருநங்கைகளின் மிகுந்த உற்சாகத்துடன், நகரில் மாலை நேரங்களில் உலா வந்தனர். news7.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக