சனி, 2 ஏப்ரல், 2016

தேர்தல் பிரசாரத்துக்கு விசேஷ பேருந்துகள் தயாராகிறது

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 45 நாட்களே உள்ள நிலையில் கட்சியின் தலைவர்கள், நடிகர், நடிகைகள் பிர சாரத்திற்கு செல்ல விசேஷ வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அந்த வாகனங்களில் தலைவர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் கட்டில், சோபா, ஏ.சி. சமையலறை, கழிப்பறை என அனைத்து வசதிகளும் இருக்கும் வகையில் நவீன கேரவன் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
சேலம் 5ரோடு தொழிற்பேட்டையில் உள்ள பிரபல கார் தயாரிக்கும் நிறுவனத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, மலையாள நடிகர் பிருத்விராஜ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தற்காக கட்சி நிர்வாகிகள் ஆர்டர் கொடுத்துள்ளதன் பேரில் நவீன வசதியுடன் கூடிய கேரவன் வாகனங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கேரவன் தயாரிக்கும் நிறுவன நிர்வாகி கூறியதாவது:–
வி.ஐ.பி.க்கள் தாங்கள் பிரசாரம் செய்வற்காக புதிய வேனை வாங்கித் தருவார்கள். அந்த வேனுக்குள் கட்டில், சோபா, டி.வி., ஏ.சி., கிச்சன் அறை , கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சிறந்த முறையில் செய்துக்கொடுப்போம். தற்போது குஷ்பு, பிருத்விராஜ் ஆகியோருக்கான வேன்கள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது.
அந்த வேன்கள் பெயிண்டிங் வேலை மட்டுமே பாக்கி உள்ளது. இதுபோன்ற கேரவன் வாகனங்கள் தயாரிப்பதற்காக ரூ.10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகிறது.
அதற்கு தேவையான பொருட்களை வெளிநாடுகளில் இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம். நாங்கள் தயாரிக்கும் கேரவன் வேன் வீடுபோல் அனைத்து வசதிகளுடனும் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். தமிழ்.tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக