சனி, 23 ஏப்ரல், 2016

நடிகை நமிதா அதிமுகவில் இணைந்தார். கொள்கை முடிவாம்...

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்.
முன்னதாக, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதினார்.
அதில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன்.தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது.
சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன்.தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
இதில் நடிகை நமீதாவும் கலந்துகொண்டு, முதல்வர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக