வெள்ளி, 1 ஏப்ரல், 2016

வைகோவின் லேடஸ்ட் கோரிக்கை ! நேதாஜியின் ஆவணங்களை பிரதமர் ரிலீஸ் செய்யணும்...

மாவீரர் நேதாஜி தொடர்பான மறைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பிரதமர் அலுவலகம் வெளியிட வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கீர்த்தி மிக்க இடம்பெற்றிருக்கும் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மறைக்கப்பட்ட ஆவணங்களில் மூன்றை மட்டும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.கடந்த 1945 ஆகஸ்ட் 18 இல் நேதாஜி பயணம் செய்த ஜப்பான் விமானம் பர்மோசாவில் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழந்தார் என்று உறுதி செய்யப்படாத தகவல்தான் இதுவரை பேசப்பட்டு வருகிறது. 

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஆவணம் மூலம் மாவீரர் நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்ததாக சொல்லப்படும் 1945 ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குப் பின்பு மூன்று முறை அவர் வானொலியில் உரையாற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.sp;மாவீரர் நேதாஜி வானொலியில் 1945 டிசம்பர் 26ஆம் தேதியும், 1946 ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் 1946 பிப்ரவரி மாதம் என மூன்று முறை உரையாற்றியுள்ளார்.;">மேலும், கடந்த 1945 ஆகஸ்ட் 18 இல் பர்மோசா தீவு விமான விபத்தில் கொல்லப்பட்டார் என்று இதுவரையில் கூறப்பட்டு வந்த தகவல் பொய்யாக்கப்பட்டுள்ளது. நேதாஜியின் புகழ் ஒளியை மறைக்க காங்கிரஸ் அரசு பண்டித நேரு காலத்தில் இருந்து செய்த வஞ்சகங்களை வரலாறு மன்னிக்கப் போவதில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை, அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை மதிமுக தொடர்ந்து கூறி வருகிறது.

;எனவே, நேதாஜி தொடர்பான மறைத்துவைத்துள்ள ஆவணங்களை அனைத்தும் இந்திய அரசு வெளியிட வேண்டும் என தெரவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக