ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

மக்களே உளுந்தூர்பேட்டல நிக்கலாம்னா...ஆத்திரங்கள்... மக்களே ரிஷிவந்தியத்தில்....மக்களே (விஜயகாந்த்).....

தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தொண்டாமுத்தூர், ஆம்பூர், ராமநாதபுரம், நாகப்பட்டிணம், உளுந்தூர் பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் திடீரென உளுந்தூர்பேட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க.வுக்கு விட்டு கொடுத்தது. இதையடுத்து தி.மு.க. வேட்பாளராக திருநாவலூர் ஒன்றிய செயலாளரான ஜி.ஆர்.வசந்தவேல் அறிவிக் கப்பட்டுள்ளார்.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு தகுதியான வேட்பாளர் இல்லாததால் இத்தொகுதியை தி.மு.க.விடம் திருப்பி கொடுத்ததாக கட்சி கூறியுள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. குமரகுரு மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதனிடையே 5 கட்டமாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள தேமுதிக, விஜயகாந்த் எங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்தே வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் உளுந்தூர் பேட்டையில் போட்டியிடுவார் என்றும், தே.மு.தி.க.வுக்கு அமைப்பு ரீதியாக அதிக பலம் உள்ளது. எனவே விஜயகாந்த் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிட்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளார் என்றும் அக்கட்சியினர் கூறிவந்தனர்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையில் திடீரென திமுக களமிறங்கியுள்ளதால் விஜயகாந்த் பின்வாங்குகிறார் என்றும், வேறு தொகுதியை தேடுகிறார் என்றும் கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டால் மனிதநேய மக்கள் கட்சியால் விஜய காந்த்தை சமாளிக்க முடியாது என கருதியே தி.மு.க. அத்தொகுதியை அக்கட்சியிடம் இருந்து கேட்டு பெற்று, வேட்பாளராக ஜி.ஆர்.வசந்தவேலுவை களத்தில் இறக்கி உள்ளது என்றும், ஒரு வேளை விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நிற்பது உறுதியானால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை விட பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்தவும் தி.மு.க. முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் நல கூட்டணி, த.மா.கா. ஆகியவற்றுடன் இணைந்து தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க.வில் 5கட்டமாக இதுவரை 93 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் கலசபாக்கம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், திண்டிவனம், மேட்டூர், உடுமலைப்பேட்டை, ஆத்தூர், ஒரத்தநாடு, மன்னார்குடி ஆகிய 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக