ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

சனி கோவில் பெண்களை அனுமதிக்க மீண்டும் மறுப்பு


இந்தியாவின் மராட்டிய மாநிலத்திலுள்ள சனி கோவிலில் நுழைய முயன்ற பெண் செயற்பாட்டாளர்களை உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி பெண்களுக்கு கோவிலினுள் அனுமதி மறுப்பு ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இருக்கும் இந்துக் கோவில்கள் அனைத்திலும் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னற்றப்படுகிறதா என்பதை சோதிப்பதற்காகவே அவர்கள் அந்தக் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.
சம்பவம் இடம்பெற்ற சனீஸ்வரர் கோவிலில் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுத்த கிராமவாசிகள் அவர்கள் உள்ளே நுழைய முடியாதவாறு தடுத்துள்ளனர். மனம் தளராதவராகத் தெரியும் பெண் செயற்பாட்டாளர்கள் குழுவின் தலைவி திருப்தி தேசாய் காவல்துறையின் உதவியுடன் தான் சனீஸ்வரர் கோயிலினுள் செலவதற்கு மீண்டும் முயற்சிக்க உள்ளதாக தெரிவித்தார்.  tamil.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக