செவ்வாய், 5 ஏப்ரல், 2016

வைகோ துரோகம் செய்துவிட்டார்! – திண்டுக்கல் ஐ.லியோனி

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், உயிருள்ளவரை திமுக தலைவர் கருணாநிதிக்கு துரோகம் நினைக்க மாட்டேன் என்று அன்று திமுக மோடைக்குமேடை வைகோ கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியை சில நாட்களிலயே மீறிவிட்டார். அவரது துரோகத்தை காலம் மறக்காது. வைகோவிற்கு விடிவுகாலமே இல்லை. பணம் வாங்கிக் கொண்டு தான் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணி அதிமுகவிற்காகவே உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார்.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக