சனி, 23 ஏப்ரல், 2016

BBC: பாகிஸ்தானில் சர்தார் சூரன் சிங் சுட்டுக் கொலை...பக்துன்தவா மாகாண சபை உறுப்பினராவார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள சீக்கிய மதத்தவர்களின் முன்னணி தலைவர் ஒருவரின் கொலைக்கு தாமே பொறுப்பு என பாகிஸ்தானிய தாலிபான்கள் கூறியுள்ளனர்.;கடந்த வெள்ளிக்கிழமையன்று கைபர் பக்தூன்க்வா மாகாண சபையின் உறுப்பினரான சர்தார் சூரன் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாட்டின் வடமேற்கேயுள்ள அந்த மாகாணத்தின் முதலமைச்சருக்கு ஆலோசகராகவும் அவர் இருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த மாகாண சபையின் நான்கு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவரது கொலைக்கு பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தானிய தாலிபான்கள், கடுமையான இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் வரை இப்படியான கொலைகள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க சட்டங்கள் இருந்தாலும், அவை செயலற்ற வகையிலேயே உள்ளன என அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
தமது சொந்த ஊரான புனேரில், கடந்த வெள்ளிக்கிழமை அவர் வீடுதிரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக் கொன்றனர்,
ஆட்சியில் இருப்பவர்களை “தீய சக்திகள்” என வர்ணித்துள்ள தாலிபான்கள், அந்த சக்திகள் அழித்தொழிக்கப்படுவர் எனவும் எச்சரித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக