செவ்வாய், 26 ஏப்ரல், 2016

"அவருடே ராவுகள் " பட தயாரிப்பாளர் தற்கொலை Avarude Raavukal Producer Ajay krishnan is no more

மலையாளத்தில் ‘அவருடே ராவுகள்’ என்ற படத்தை தயாரித்தவர் அஜய் கிருஷ்ணன்(வயது 29). இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷானில் இயக்கி இருந்தார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு முன்பு முதல் காப்பியை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணன் ‘பிரிவியூ’ தியேட்டரில் போட்டு பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
படத்தை இயக்குனர் நன்றாக எடுக்கவில்லை என்றும், படம் ஓடாது என்றும் அவருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் சொல்லி புலம்பினார். படத்துக்கு செலவழித்த ரூ.4 கோடியை இழந்து கடனாளியாகி விடுவேன் என்று அழுதபடி இருந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக