செவ்வாய், 26 ஏப்ரல், 2016

சமந்தா 70 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கான முழு செலவு

விஜய்யுடன் நான் நடித்த ‘தெறி’ படத்தின் வெற்றி எனக்கு டானிக். தமிழில் ராசி இல்லை என்று என்னை குறை சொன்னவர்கள் இனி வாய்திறக்க முடியாது. ஐதராபாத்தில் நான் தெறி படம் பார்த்தபோது நான் சாகிற சீனை பார்த்து பலர் அழுதாங்க. அதுவே எனக்கு பெரிய வெற்றி. ‘24’ படத்தில் சூர்யா 3 வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடத்தில் வரும் சூர்யாவுக்கு நான் ஜோடியாக நடித்திருக்கிறேன். அடுத்து ‘வடசென்னை’ படத்தில் தனுசுடன் நடிக்க இருக்கிறேன். இதில் குப்பத்து பெண்ணாக வருகிறேன். தெலுங்கில் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், நிதின் ஆகியோர் ஜோடியாக 3 படங்களில் நடிக்கிறேன். இரவு பகலாக படபடிப்பு நடந்ததால் சென்னையில் நடந்த தெறி பட விழாவுக்கு வரமுடியவில்லை. நான் சாதாரண குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தேன். மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. சினிமாவில் நடிக்கத் தொடங்கி 6 வருடங்கள் ஆகிறது. எனவே என்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு முடிந்த அளவு உதவுகிறேன். இது வரை 70 பேருக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கான முழு உதவியையும் செய்து இருக்கிறேன். இதற்காக ‘பிரத்யூக்ஷா பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை அமைத்து இருக்கிறேன். இன்னும் பலருக்கு உதவ வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே என்னால் முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன்” என்றார் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக