செவ்வாய், 5 ஏப்ரல், 2016

5 எம்.எல் .ஏக்கள்மா.செக்கள் விஜயகாந்துக்கு 24 மணி நேரம் கெடு....திமுகவுடன்தான் கூட்டணி.....அதிருப்தியாளர்களை டிஸ்மிஸ்.....தேமுதிக

தே.மு.தி.க. கூட்டணி குறித்து அதிருப்தி தெரிவித்து பத்திரியாளர்களைச் சந்தித்தவர்களை கட்சியைவிட்டு நீக்கியுள்ளார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த். விஜயகாந்த் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதற்கு அதிருப்தி தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களும் சில மாவட்டச் செயலாளர்களும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். 24 மணி நேரத்திற்குள் விஜயகாந்த் தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் கூறினர். இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து கட்சித் தலைவர் விஜயகாந்த் நீக்கியிருக்கிறார். அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், துணைச் செயலாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர்கள் பலர் என பத்து பேரை கட்சியைவிட்டு நீக்குவதாக விஜயகாந்த் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.tamil.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக