வியாழன், 21 ஏப்ரல், 2016

பாலியல்...மறுத்த 250 பெண்களை ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொன்றனர்

ஈராக்கில் பாலியல் அடிமைகளாக மறுத்த 250 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்துவிட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியா, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பெண்களை பாலியல் அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி விற்பனை செய்யும் செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களை அவர்கள் கொலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு ஈராக்கில் பாலியல் அடிமைகளாக ஆக மறுத்த சுமார் 250 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொன்று குவித்தனர் என்று மீடியா செய்தி வெளியாகி உள்ளது.
மொசூல் நகரில் தீவிரவாதிகளை சிறிது காலம் திருமணம் செய்துக் கொள்ள ஐ.எஸ். தலைமையகம் உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து திருமணம் செய்ய மறுத்துக் கொண்ட பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பாலியல் அடிமைகளாக ஆக மறுத்த பெண்களின் உறவினர்களும் கொல்லப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மொசூல் நகரில் பெண்களை தேர்வு செய்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அவர்களை தீவிரவாதிகளை சிறிது காலம் திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்திஉள்ளது. மறுத்த பெண்கள் அனைவரும் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு உள்ளனர் என்று குர்திஷ் ஜனநாயக கட்சி தெரிவித்து உள்ளது. dailythanthi.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக