ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய்,108' ஆம்புலன்சில்பணம் .... அம்மா என்றால் அன்பு..

தினமலர்.com :தேர்தலில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, கரூர் பைனான்சியர் வீட்டில் பதுக்கிய, 250 கோடி ரூபாய் பணத்தை, தேர்தல் கமிஷன் புகாரில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். மேலும், தேர்தல் கமிஷன் உத்தரவில், நேற்று ஒரே நாளில், 45 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில், பண பட்டுவாடாவை தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும், வருமான வரித்துறை துணை இயக்குனர் தலைமையில், ஒரு உதவி கமிஷனர், ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம்பெற்ற படை அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் சில வாரங்களாக, பண நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். கரூரில், அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன் என்பவர் வீட்டில், நேற்று முன்தினம், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.'இந்தச் சோதனையில், 10.30 லட்சம் ரூபாய் ரொக்கம்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்; ஒரு டிராக்டர்; ஒரு கார்; 12 பணம் எண்ணும் மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன' என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று, ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. 'கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவு பணம்' என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, 'அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்' என, தகவல்கள் கிடைத்தன.
 இதேபோல், தமிழகம் முழுவதும், பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக, சந்தேகிக்கப்பட்ட இடங்களில், நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
* கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* சென்னையில், ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் உறவினர் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
* கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
* இந்தக் கேமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சோதனை நடப்பது எப்படி?

'தேர்தல் பட்டுவாடாவுக்காக, பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வீடு மற்றும் இடங்களில், பறக்கும் படையினர் சோதனை நடத்தக் கூடாது. வருமான வரித் துறையினர் தான் சோதனை நடத்த வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
சோதனை எப்படி நடத்த வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள வழிமுறைகள்:
* பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தால், உடனடியாக செலவினப் பார்வையாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* செலவின பார்வையாளர் அல்லது பொறுப்பு அதிகாரி, உடனடியாக வருமான வரித்துறை அதிகாரிக்கு, தகவல் தெரிவித்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
* பறக்கும் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல வேண்டும். சம்பவ இடத்திற்கு சற்று துாரத்தில் இருந்தபடி, வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்து, விசாரணை நடத்தும் வரை, அந்தப் பகுதியை கண்காணிக்க வேண்டும்.
* வருமான வரித்துறை அதிகாரிகள் வருவதற்கு முன், யாரும் அந்த பகுதிக்குள் நுழையக் கூடாது.
* பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் நடவடிக்கைகளை, வருமான வரி அதிகாரிகள் மேற்கொள்வர். அவர்கள் கேட்டுக்கொண்டால், செலவின பார்வையாளர் மற்றும் பறக்கும் படையினர் உள்ளே செல்லலாம்.இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

'108' ஆம்புலன்சில்பணம் கடத்தலா?

கரூரில், '108' ஆம்புலன்சில் கடத்தப்பட்ட பணம் சிக்கியதாக தகவல் பரவியது. இதுகுறித்து, '108' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது:கரூரில், பணம்
கொண்டு சென்றதாக கூறப்படும் வாகனம், நெய்வேலி பதிவு எண் கொண்ட தனியார் வாகனம்; அது, '108' ஆம்புலன்ஸ் அல்ல.
தேர்தலையொட்டி, '108' ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதில், 25 விதிமுறைகள் உள்ளன. அதன்படியே, ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். '108' ஆம்புலன்ஸ்சில் பணம் கடத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது.
இவ்வாறு அவர் கூறினார்.

யார் அந்த அன்புநாதன்?

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த, அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி. 10 ஆண்டுகளுக்கு முன், கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதிலிருந்து விலகிய பின், புதிதாக, நிதி நிறுவனம் துவங்கி, தன் மகன் அன்புநாதன், 42, பொறுப்பில் ஒப்படைத்தார்.

அவர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பணம் சப்ளை செய்யும் பைனான்சியராக வலம் வருகிறார்.அப்போது, உள்ளூர், அ.தி.மு.க., பிரமுகரும், தன் ஜாதியை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜியுடன் நட்புஏற்பட்டது. மேலும், திண்டுக்கல்லில் உள்ள அக்காவின் வீட்டுக்கு சென்று வரும்போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடமும் பழக்கம் ஏற்பட்டது. அவரது பணத்துக்கு பாதுகாப்பு கொடுப்பவராகவும், கொடுக்கல், வாங்கல் செய்யக்கூடியவராகவும் உருவெடுத்தார்.

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு அமைச்சருக்கும், குறிப்பிட்ட தொகுதிக்கு பணம் சப்ளை செய்யும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வேலையை பாதுகாப்புடன் அன்புநாதன் செய்து கொடுத்ததாக, அப்போதே தகவல் பரவியது.அவர் கூறியபடி, திருச்சி, கோவை மண்டலங்களில் உள்ள தொகுதிகளுக்கு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பணம் சப்ளை செய்யப்பட்டது. எந்த பிரச்னையும் ஏற்படாமல், பாதுகாப்பாக பணம் சப்ளை செய்து கொடுத்ததால், தற்போதைய சட்டசபை தேர்தலுக்கு, பல அமைச்சர்களுக்கு அன்புநாதன் தேவைப்பட்டுள்ளார்.

அதனால், அவர் மூலம், பல கோடி ரூபாய், கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டு, தொகுதி வாரியாக சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததாக, தி.மு.க., பிரமுகர்கள் கூறினர்.

பண புழக்கம் உள்ள கரூர் பகுதி

திருச்சியை அடுத்த கரூர், திண்டுக்கல், செல்லுார் ஆகிய இடங்களில், 80க்கும் மேற்பட்ட பஸ் பாடி கட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. கரூரில் மட்டும், 60 தொழிற்சாலைகள் உள்ளன. 20 பேர் குழு, 25 நாட்களில், ஒரு பஸ்சை தயாரிக்கும். ஏற்கனவே தயாரித்த பஸ்கள், மார்ச் மாதத்திற்கு முன் இயக்கத்திற்கு வந்து விட்டன. ஜூன் மாதத்திற்கு பின் தான், பஸ் அடிச்சட்டம் வாங்கப்பட்டு மீண்டும் பணி விறுவிறுப்பாகும். பஸ் பாடி கட்டும் தொழிலால், கரூர் பகுதியில் பண புழக்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
45 இடங்களில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
* கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* சென்னையில், ஒரு நகைக் கடையில் சோதனை நடத்தப்பட்டு, பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
* காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் உறவினர் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டு உள்ளது.
* கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
* இந்தக் கேமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகி உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆம்புலன்ஸ் மீது வழக்கு
அன்புநாதன் குடோனில் கைப்பற்றப்பட்ட ஆம்புலன்சில், 'நேஷனல் ஹெல்த் ரூரல் டெவலப்மென்ட் ஸ்கீம், கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, எழுதப்பட்டிருந்தது.
அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்ததால் வாகனத்தை கைப்பற்றி, வேலாயுதம்பாளையம் போலீ சார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரெய்டு நடந்த போது, மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனமும், கரூர் நகர் பகுதியில் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் எங்கு உள்ளது; அதில் எவ்வளவுபணம் இருந்தது என்பதை அதிகாரிகள் கூற மறுத்துவருகின்றனர்.

கரூரில் நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அன்புநாதன் குடோனில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு, 21ம் தேதி இரவு புகார் சென்றது. />அதன்படி அன்றிரவு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இந்த தகவல், பதுக்கல் கும்பலுக்கு தெரிய வந்ததால் அவர்களும் உஷாராகி, பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை இடமாற்றம் செய்யும் தகவல் பரவியது.
ஏப்., 22 காலை, 'ரெய்டு' நடத்த, கரூர் எஸ்.பி., வந்திதா பாண்டே தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், அன்புநாதன் குடோனுக்கு சென்றனர். அங்கு, 10.33 லட்சம் ரூபாய் ரொக்கம்; நான்கு கார்; ஒரு டிராக்டர்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருந்தும், மாவட்ட அதிகாரிகளின் உதவி இல்லாமல், வருமான வரித்துறை (புலனாய்வு பிரிவு) அதிகாரி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணியிலிருந்து, நேற்று காலை, 10:30 மணி வரை, அன்புநாதனின் வீட்டில் சோதனை நடத்தினர்.
போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து, அன்புநாதன் தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது.
அவர்கள் சுதாரித்து, அன்று இரவே பல கோடி ரூபாயை, வேறு இடங்களில் பதுக்கியதாக தெரிகிறது. அன்புநாதன் குடோனில் இருந்து, 10.33 லட்சமும்; வீட்டில் இருந்து, 4.77 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் பணம் கைப்பற்றி, தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆம்புலன்ஸ் மீது வழக்கு

அன்புநாதன் குடோனில் கைப்பற்றப்பட்ட ஆம்புலன்சில், 'நேஷனல் ஹெல்த் ரூரல் டெவலப்மென்ட் ஸ்கீம், கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, எழுதப்பட்டிருந்தது.அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்ததால் வாகனத்தை கைப்பற்றி, வேலாயுதம்பாளையம் போலீ சார், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரெய்டு நடந்த போது, மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனமும், கரூர் நகர் பகுதியில் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் எங்கு உள்ளது; அதில் எவ்வளவுபணம் இருந்தது என்பதை அதிகாரிகள் கூற மறுத்து வருகின்றனர்.

'ரெய்டு'க்கு எதிர்ப்பு

அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, அவரது வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தேர்தல் ஆணைய உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்த பின், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கிருந்து கிளம்பினர். உள்ளூர் பிரமுகர்கள் சிலர், அன்புநாதனுக்கு ஆதரவாக, பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.

கலெக்டரை மாற்ற கோரிக்கை

கரூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த போது மணல், 'மாபியா'க்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்தது. அதனால் அவர் கரூருக்கு மாறுதல் செய்யப்பட்டார். இந்த இடமாறுதலுக்கு, கிருஷ்ணகிரியில் கல்லுாரி நடத்தி வரும் லோக்சபா துணை சபாநாயகரும், கரூர் எம்.பி.,யுமான தம்பிதுரை காரணம் என்று கூறப்பட்டது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், கரூர் பி.டி.ஓ., அன்புசெல்வன் தலைமையிலான பறக்கும் படையினர், வாகன தணிக்கையின் போது, 10 லட்சம் ரூபாய், பரிசு பொருட்களை கைப்பற்றினர்; அவற்றை விடுவிக்க, கலெக்டர் தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை.
இது தொடர்பாக, கரூர் மாவட்ட, தி.மு.க.,வினர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு புகார் அனுப்பி உள்ளனர்.

கண்காணிப்பில் திண்டுக்கல்

திண்டுக்கல், தேனி உட்பட பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களுடன் அன்புநாதனுக்கு தொடர்பு இருக்கலாம் என தேர்தல் அதிகாரிகள் கருதுவதால், அந்த மாவட்டங்களிலும் திடீர் சோதனை நடத்த தயாராகி வருகின்றனர். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முதன்
முதலாக அமைச்சராக பொறுப்பேற்ற போது அவருக்கு, அன்புநாதன் நெருக்கமானவராக இருந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடும், ஆத்துார் தொகுதி தான் பணம் விளையாடும் தொகுதியாக கருதப்படுகிறது. தி.மு.க.,வின் பலம் வாய்ந்த, ஐ.பெரியசாமியை எதிர்த்து களம் இறங்குவதால், சில நாட்களாக இங்கு பணம் வெள்ளமாக பாய்கிறது.

lநமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக