வெள்ளி, 1 ஏப்ரல், 2016

கொல்கத்தா பாலம் திடீரென விழுந்ததில் 17 பேர்


கொல்கத்தாவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கணேஷ் டாக்கிஸ் பஜார் பகுதியில் கே.கே.தாகூர் சாலை மேல் நீண்ட காலமாக கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலத்தின் மேல் புதன்கிழமை சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் அந்த மேம்பாலம் நிலைகுலைந்து சரிந்து விழுந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஏராளமானோர் சிக்கினர். 17 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
ராணுவத்தினரும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பிரச்சாரத்திற்காக சென்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பார்வையிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஒரு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 3 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக