புதன், 6 ஏப்ரல், 2016

கேரளாவில் 10-ஆம் வகுப்பு தலித் சிறுமியை 12 பேர் 2 மாதமாக மிரட்டி பலாத்காரம்


A minor Dalit girl was tortured and raped by at least 12 men during the last two..கேரளாவில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை 12 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 மாதமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்த வக்கிர செயல் நிகழ்ந்துள்ளது. தலித் சிறுமியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தன் தாயாருடன் தன் பெரியம்மா வீட்டில் வசித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக மேடைகளில் நடனமாடி படிப்பையும் தொடர்ந்தார் அவர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வீடுக்கு வந்த பெரியம்மா மகனின் நண்பர்கள் இரண்டு பேர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஆட்டோ ரிக்‌ஷாவில் கடத்தி சென்று தனிமையான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்து அதனை மொபைலில் படம் பிடித்துள்ளனர். வெளியில் சொன்னால் இந்த வீடியோ காட்சியை வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர் அவர்கள். பின்னர் அடிக்கடி அந்த சிறுமியை வீடியோ காட்சியை காட்டி மிரட்டி தங்கள் ஆசை தீர வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து வந்தனர்.

சில ஆண்களிடம் சிறுமியை அறிமுகப்படுத்தி பணத்துக்காகவும் சிறுமியை அனுப்பி வைத்துள்ளனர் இவர்கள். இந்த இரண்டு மாதங்களில் 12 பேர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் பொது இடத்தில் சிறுமிக்கும் அந்த நபர்களுக்கும் பிரச்சனை வர அவர்கள் சிறுமியை தாக்க முற்பட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்து அவர்களை கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் 12 பேர் கடந்த 2 மாதமாக சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்த சம்பவம் தெரியவந்தது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகள் 4 பேரை தேடி வருகின்றனர். webdunia.com< Thiruvananthapuram: A minor Dalit girl was tortured and raped by at least 12 men during the last two... Read more at: http://english.manoramaonline.com/news/kerala/dalit-minor-girl-raped-two-months-12-men-torture-attingal-thiruvananthapuram.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக