புதன், 16 மார்ச், 2016

உ.வாசுகி:அதிமுகவும், திமுகவும் பணபலம், சாராயம், சாதி அரசியலையும் நம்பி தேர்தலைச் சந்திக்கிறது

அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகள் சின்னச்சின்ன சாதிய அமைப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்து வளர்த்துவிடுவது மிகவும் ஆபத்தானது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி.அதிமுகவும், திமுகவும் பணபலத்தையும், சாராயத்தையும், சாதி அரசியலையும் நம்பி தேர்தலைச் சந்திக்கிறது. குரங்கு கையில் மாட்டிய அப்பமாக தமிழக மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுகவிடம் மாட்டி சீரழிந்து வருகின்றனர். தமிழக அரசியலில் மாற்றம் வேண்டி மக்கள் நலக்கூட்டணி தேர்தலைச் சந்திக்கிறது.

பெரிய கட்சிகளிடம்கூட தனக்கு கீழ் உள்ள கட்சி நிர்வாகிகளையே தேர்தல் உடன்பாடு குறித்து பேச வைப்பார் ஜெயலலிதா. ஆனால், தற்பொழுது சின்னச்சின்னக் கட்சிகளைக்கூட நேரடியாக அழைத்துப் பேசும் அளவிற்கு அவர்கள் தடுமாற்றத்தில் இருக்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் சாதிய அமைப்புகளிடம் தேர்தல் உடன்பாடு வைத்துள்ளது. அவர்களுக்கு அங்கீகாரம்கொடுத்து ஊக்கப்படுத்துவது சமூக ஜனநாயத்திற்கு மிகவும் ஆபத்தான போக்காக முடியும்.
தேர்தல் ஆணையமும் காவல்துறையும் ஆளுங்கட்சியை ஒரு மாதிரியாகவும், எதிர்க்கட்சிகளை வேறு மாதிரியாகவும்நடத்தும் போக்கு உள்ளது. என்ன ஜனநாயகம் இது? இது எப்படி நேர்மையான தேர்தலுக்கு வழிவகுக்கும். சமமான மைதானத்தில் அனைவரையும் விளையாட விடும்போதுதான் உண்மையான வெற்றி தெரியும்.

காவல்துறை எங்கள் பொதுக்கூட்டங்களுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகளை கொடுத்து வருகிறது. காவல் துறையில் உயர் அதிகாரிகளிடம் கீழே உள்ளவர்கள் பணி செய்யும் ஆர்டர்லி முறை இருந்தது. இதை பாராளுமன்றத்தில் வாதாடி ஒழித்துக்கட்டியது எங்கள் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத். தேர்தல் ஆணையம் பாரபட்சமற்ற முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.;பகத்சிங் nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக