சனி, 19 மார்ச், 2016

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது

10636714_833153493461570_4737935019808150692_o (1)
பெரியார் இயக்கங்கள், கம்யுனிஸ்ட்டுக் கடசிகள் எவ்வளவோ ஜாதி மறுப்புத் திருமணங்களை (ஆண் தலித் – பெண் ஜாதி இந்து) செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் வே.மதிமாறன் :20 காலையில் தான் நான் பேசுறேன். ஆனால், நாளை காலையிலேயே அங்கிருப்பேன். நண்பர்களைத் தோழர்களைச் சந்திப்பதை விட வேறுஉண்டோ ஆனந்தம்.. ‘சந்திப்போம்’
BHEL நிறுவனத்தில் வேலை செய்யும் தோழர்கள் திலிப், ஆண்டிராஜ், கனிவண்ணன், சந்திரன், பஞ்சு;
shift system முறையில் நாளைக்கு நிறையத் தோழர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதைவிட முக்கியம் திலிப் வீட்டில் விருந்து. (Thilip Kumar)
‘மனுசங்க சாப்பிடற எல்லாத்தையும் சாப்பிட வேண்டியதுதான்’
இன்னொரு முக்கியமான ரகசியமான விஷயம். நம்ம தம்பி ஒருத்தர், ஜாதி இந்து பொண்ண லவ் பண்ணிட்டார். அந்தப் பொண்ணும் ‘கட்டுனா இவரதான் கட்டுவேன்’ என்று அடம் புடிக்குது. எப்பவும் போல பொண்ணு வீட்லதான் பிரச்சினை.
தர்மபுரி, ஓமலூர், உடுமலை சம்பவங்களையெல்லாம் பத்து பைசாவிற்குக்கூட மதிக்கவில்லை இந்தக் காதலர்கள்.
ஏற்கனவே இதுபோன்ற திருமணங்களைப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி நடத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், பெற்றோர்களின் சம்மத்துடன் நடத்த முயற்சிப்போம்.
‘சம்மதம் இல்லாட்டியும் நடக்கும். உங்களுக்குதான் அசிங்கமாயிடும்’ என்பதைத் தன்மையா புரிய வைச்சிட்டா நிச்சயம் சம்மதிப்பார்கள்.
அரசியல் பின்னணியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் வீரமெல்லாம் அப்பாவிகளாகப் பயந்து வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்துகொள்கிறவர்களிடம் தான்.
பெரியார் இயக்கங்கள், கம்யுனிஸ்ட்டுக் கடசிகள் எவ்வளவோ ஜாதி மறுப்புத் திருமணங்களை (ஆண் தலித் – பெண் ஜாதி இந்து) செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். (அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுப்பாங்களே தவிர, அவுங்கக்கிட்ட யாரும் சண்டைக்கு வர முடியாது.)
ஆக, ஜாதி ஒழிப்பு மாநாட்டைச் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டியதுதான்.
சந்திப்போம். திருச்சி சிறுகனூரில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக