வெள்ளி, 4 மார்ச், 2016

பிச்சைகாரன் படத்தை தடை செய்ய பார்ப்பனர் சங்கம் கோரிக்கை

“பிச்சைக்காரன்” திரைப்படத்தை தடை செய்ய கோரி பார்பனர்கள் (பிராமணர்கள்) சங்கத்தினர் புகார் கோவை, அகில இந்திய பார்பனர்கள் சங்க தேசிய செயலாளர் இராமநாதன் மற்றும் நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அப்புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இசையமைப்பாளர் விஜய்ஆண்டனி நடித்து, அவரது தயாரிப்பில், “பிச்சைக்காரன்” என்ற திரைப்படம் வெளிவர உள்ளது.
இப்படத்தின் சில காட்சிகள், மார்ச் முதல் தேதி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதில், அருவருக்கத்தக்க வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்துக்கள் புனிதமாக கருதும் காயத்ரி மந்திரத்தை இழிவுப்படுத்தி பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. எனவே, இந்த படத்துக்கு தடை விதிப்பதுடன், பட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இணையதளங்களில் பரவி வரும் இப்படத்தின் பாடலை தடை செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது nakkheeran,in


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக