சனி, 19 மார்ச், 2016

உதயநிதி ஸ்டாலின்: தேர்தலில் நிற்கவில்லை..எந்த காலத்திலும் தேர்தலில் நிற்க போவதில்லை .

நடிப்பு, படங்கள் தயாரிப்பு, விநியோகம் என்றிருக்கும் உதயநிதியும் அரசியலில் குதிப்பது யாருக்கும் ஆச்சரியமாக இல்லை. ஆனால் இதை உதயநிதி மறுத்துள்ளார். எனக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தத் தேர்தல் என்றில்லை எந்தத்தேர்தலிலும் நான் நிற்கப் போவதில்லை. ஒரு தொகுதியில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், விருப்ப மனு தாக்கல் செய்யலாம். அப்படி என்னுடைய பெயரில் யாராவது விருப்ப மனு தாக்கல் செய்திருக்கலாம். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.  எமது முந்தய செய்தி தவறாக இருந்தால் அதற்காக உதயநிதியிடம் மன்னிப்பு கோருகிறோம்....இந்த செய்தி தவறாக இருந்தால் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறோம் 
தொடர்ந்து சினிமாவில் நடித்தபடி படங்களை தயாரிக்கவும், விநியோகிக்கவுமே தனக்கு விருப்பம் எனவும் அவதெளிவுபடுத்தியுள்ளா வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக