சென்னை: அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜயதாரணியின்
கணவர் சிவக்குமார் கென்னடியின் உடலுக்கு திமுக, காங்கிரஸ்
தலைவர்கள்,பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி. வழக்கறிஞரான இவர் நேற்று
மாரடைப்பால் மரணமடைந்தார். 50 வயதான சிவக்குமார் கென்னடிக்கு நெஞ்சு வலி
ஏற்பட்டதும், இசபெல்லா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வரும்
வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அந்த சமயத்தில் விஜய தாரணி டெல்லி போயிருந்தார். கணவர் இறந்த தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவசரம் அவசரமாக கிளம்பி நேற்று மாலைக்கு மேல் சென்னை திரும்பினார். கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். சிவக்குமார் கென்னடி - விஜயதாரணியின் மூத்த மகள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இதனால் மகளுக்கு வசதியாக அருகில் உள்ள முகலிவாக்கத்தில் வசித்து வருகிறது விஜயதாரணி குடும்பம். சிவக்குமார் கென்னடியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசீனா சையத் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Leaders condole the death of Vijayadharani's husband துக்கம் கேட்ட ஜி.கே.வாசன், பொன்.ராதா அதேபோல தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று விஜயதாரணியிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.
Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக