கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், கிங்ஃபிஷர் மதுபான ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை விஜய் மல்லையா நடத்தி வருகிறார். இதில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு காலகட் டங்களில் பின்னடைவைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 கடன்தாரர்களிடம் ரூ.6,900 கோடியை கிங்ஃபிஷர் நிறுவனம் கடனாகப் பெற்றது.
நீண்ட நாட்களாக கடனை திரும்ப செலுத்தாத நிலையில், விஜய் மல்லையாவையும், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் மூன்று இயக்குநர்களையும் "வேண்டுமென்றே பணத்தை திருப்பிச் செலுத்தத் தவறிய மோசடியாளர்கள்' என்ற பட்டியலின் கீழ் ஸ்டேட் வங்கி அறிவித்தது. எப்படியும் விஜய் மல்லையா ஜெயலலிதாவை போல வழக்குகளில் இருந்து தப்பி கொண்டே இருப்பார் என்றே தோன்றுகிறது...அவா கிருபை தான் எல்லா இடங்களிலும் ஆட்சி?
இதனை தொடர்ந்து, விஜய் மல்லையாவை கைது செய்ய வேண்டும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் விஜய் மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் பிரதி வாதிகள் 9 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையா மீது மத்திய அமலாக்கத் துறை பண மோசடி வழக்கு ஒன்றினை பதிவு செய்துள்ளது. சிபிஐ தரப்பில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடன் பிரச்சனையில் சிக்கி கைதாகும் நிலையில் உள்ள மல்லையாவுக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடன் தீர்ப்பாயத்தில் ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் லலித் மோடியை போன்று வெளிநாட்டிற்கு விஜய் மல்லையா தப்பித்து சென்றுவிட முடியாது என்று அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக