வியாழன், 10 மார்ச், 2016

பாஜகவில் மகளிர் தினம் பார்ப்பனீய பெண்கள் ...கமலா,பத்மினி,லட்சுமி,சின்மயி,மதுவந்தி...

201603090214395346_If-the-answer-to-speculation-about-the-political-strategies_SECVPFவே.மதிமாறன்: கேக் வெட்டி கொண்டாடினாராம். மகளிர் தினமா இல்ல தமிழிசை சவுந்தரராஜனின் பிறந்த நாளா? ‘பெண் இழிவான பிறப்பு. கணவன் இறந்தால் உயிரோடு கொளுத்து. கங்கையில் அமுக்கு.’ என்ற கொடூரங்களைப் புனிதமாகவும் தனது தத்துவமாகவும் கொண்டிருக்கிற ஒரு கட்சி பா.ஜ.க.
‘இந்துப் பெண் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்று இன்றும் பெண்களுக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசுகிற ஒரே கட்சி பா.ஜ.க.
காதல், அன்பு, பாசம் அல்ல அதன் நோக்கம். வெறுப்பு, ஆண் ஆணவம், பெண் அடிமைத் தனம் இவையே இந்து அமைப்புகளின் தத்துவம்.
கொடுமை, அந்தக் கட்சியில் பெண்கள் இருக்கிறார்கள் என்பதுகூட அல்ல; அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் இருக்கிறது. இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கட்சிகூட மகளிர் தினம் கொண்டாடுகிறது. கிளாரா ஜெட்கின் போன்ற புரட்சிகரப் பெண்களை இதை விடக் கேவலப்படுத்த முடியாது.
பா.ஜ.க. அல்லாத பல முன்னணி பெண்கள், பா.ஜ.க. கொண்டாடிய மகளிர் தினத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கமலா செல்வராஜ், இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், பின்னணி பாடகி சின்மயி, நடிகை குட்டி பத்மினி, ஓய்ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி.
இவர்களுக்குத் திமுக, மதிமுக, காங்கிரஸ் இதெல்லாம் கட்சியாகவே தெரியாதோ? விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், புதிய தமிழகம், தமிழ் நாட்டில் மகளிர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடிய ஒரே கட்சியான ஆதித் தமிழர் பேரவை இந்தக் கட்சிகளை எல்லாம் இவர்கள் கண்ணால் பார்த்தால் கூடத் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்று நினைப்பார்களோ?
‘இவா’ எல்லாருக்கும் பெண் என்பதைத் தாண்டி இன்னொரு ‘ஒற்றுமை’ இருக்கிறது. அந்த ஒற்றுமைதான் பா.ஜ.க. வை விரும்ப வைக்கிறதோ?
இதில் டாக்டர் கமலா செல்வராஜ் பா.ஜ.க வை தீவிரமாக ஆதரிக்கலாம். அந்தக் கட்சியினால் அவருக்கு லாபம் இருக்கிறது.
‘பெண் நான்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்ளாதவள் பெண்ணே அல்ல’ என்ற பா.ஜ.க வின் கொள்கை அவருக்கு நிச்சயம் அதிகம் பிடித்திருக்கும். அதனாலேயே அதை அவர் ஆதரிக்கலாம். ஆனால், அவர் எப்படி மகளிர் தினம் கொண்டாடலாம்?
தமிழக உழைக்கும் பெண்கள் மீது இந்து அமைப்புகள்கூட இத்தனை நூற்றாண்டுகளாக நிகழ்த்தாத மோசமான வன்முறையை இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
தன் உடல் உருக்கி, உயிர் உருக்கி தன்னிலை மறந்த நிலையில் பிரசிவிப்பதே தாய்மை. இனி குழந்தையைத் தவிர, தனக்கான வாழ்க்கை வேறொன்றுமில்லை என்ற பரிதாப நிலைதான் தாய்மை. என்னைப் பொறுத்தவரை பெண்ணின் வாழ்க்கையில் தாய்மைதான் பெரும் துயரம்.
ஆனால், இவரோ கர்பப்பை என்பதையே ஏதோ ‘கை’ பை என்பதாகச் சித்திரித்து, ‘பை யிலிருந்து பொருளை எடுத்து தந்துவிட்டுப் போய்க் கொண்டே இரு’ என்பதைப் போல் மாற்றி விட்டார் தாய்மையை. பொருள் கூட யாரிடம் தருகிறோம் என்பது தெரியும்.
ஆனால், தான் பெற்ற குழந்தையை யாரிடம் தருகிறோம் என்பது கூடத் தெரியாமல் ஒரு தாய், குழந்தையை அல்ல தாய்மையை விற்று விட்டு செல்வது, இதுவரை பெண்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையிலேயே மிக மோசமான வன்முறை.
அந்த வன்முறைக்குப் பெயர் ‘வாடகை தாய்’. அதைத் தமிழகத்தில் முதல் முறையாக நிகழ்த்திய டாக்டர் கமலா செல்வராஜ் கூட மகளிர் தினம் கொண்டாடுவது, அதை விடப் பெரிய வன்முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக