புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அருள்மணி. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரான இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குடித் தொகதியில் தி.மு.க சுட்டணியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறையும் பா.ம.க சார்பில் மருத்துவர் அருள்மணிக்கே ஆலங்குடி தொகுதியில் போட்டியிட அக்கட்யின் நிறுவனர் அறிவித்திருந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பில் இருந்தே தேர்தல் பணிகளில் ஈடுபட்டும் வருகிறார். கடந்த மாதம் கீரமங்கலம் வந்த பா.மக. நிறுவனர் ராமதாஸ் ஆலங்குடித் தொகுதி வேட்பாளராக போட்டியிடும் அருள்மணி வெற்றி பெரும்போது சுகாதாரத்துறை அமைச்சராகவும் வாய்ப்பு வழங்கப்படும் என்று விழா மேடையில் அறிவித்தார்.
இந்த நிலையில் மற்ற கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிப்பு இன்னும் வராத நிலையில் அருள்மணியோடு சேர்ந்து பாமகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக ஆலங்குடித் தொகுதியில் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு, புளிச்சங்காடு, கொத்தமங்கலம் மற்றும் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள கொடிவயல் போன்ற பல கிராமங்களில் வாக்கு சேகரித்து வருகிறார். வாக்காளர்களை பார்த்து எனக்கு இந்த முறை ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுவிட்டு வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்கு கேட்கிறார். அவருடன் அக்கட்சி பிரமுகர்கள் பலரும் வாக்காளர்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரித்தபோது திடீரென காலில் விழுந்து வணங்குவதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பகத்சிங் nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக