வியாழன், 17 மார்ச், 2016

புலனாய்வு....விஜயகாந்த் டம்மி.....தேர்தலுக்கு பிறகு பிரேமலதா கட்சியை....? ஆங் அதேதான்

தேர்தலுக்கு பிறகு, விஜயகாந்த்தை டம்மியாக்கி, பிரேமலதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தி.மு.க.,வுடனான கூட்டணியை தவிர்த்துள்ளதாக, தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தே.மு.தி.க., நேர்காணலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்ற கேள்வியை விஜயகாந்த் கேட்டுள்ளார். பெரும்பாலான நிர்வாகிகள், தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்கலாம் என, பதிலளித்துள்ளனர். இந்நிலையில், மார்ச், 11ம் தேதி நடந்த மகளிர் அணி கூட்டத்தில், 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவோம் என்ற அறிவிப்பை விஜயகாந்த் வெளியிட்டார். இதனால், தொண்டர்களும், நிர்வாகிகளும் ஏமாற்றம் அடைந்தனர். தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பை எட்ட முடியுமா? என்ற குழப்பத்தில் நிர்வாகிகள் வலம் வருகின்றனர்.  அந்த ஆள் இப்பெல்லாம்  தண்ணி போடாமலே உளறுகிறார்..மறை கழண்டுகிட்டே வரது ...பிரேமாவுக்கு அடிச்சது  ஜாக்பாட்...சு.சாமிவேற திட்டங்கள் தீட்டி தீட்டி கிட்டே பிரேமாவை வழி நடத்துறார்....ஜமாயுங்க    


இது குறித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தேர்தலின்போது, விஜயகாந்த் கூட்டணி பற்றி பேசும் போது தொண்டர்கள் பலத்த கோஷமிடுவர். தனித்து போட்டி என்று சொன்னதும் தொண்டர்களிடையே கோஷம், உற்சாகமும் இல்லை. லட்சக்கணக்கான உறுப்பினர்களை கொண்டிருந்த, எம்.ஜி.ஆர். கூட சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்றார். மேல்மட்ட நிர்வாகிகள் விஜயகாந்துடன் இருந்தாலும், கீழ்மட்ட நிர்வாகிகள் வேறு கட்சிக்கு தாவி விடலாம் என்ற முடிவோடு, தி.மு.க., உள்ளிட்ட கட்சியினருடன் தொடர்பு கொண்டுள்ளனர். மார்ச், 11ம் தேதி மகளிர் அணி கூட்டத்தில், 'தே.மு.தி.க., தனித்து போட்டி' என, விஜயகாந்த் அறிவித்தார். அப்போது குறுக்கிட்ட பிரேமலதா, 'தே.மு.தி.க.,வை தலைமை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்' என, கூறினார். விஜயகாந்த் உடல் நிலையை கருத்தில் கொண்டு, வரும் காலங்களில், பிரேமலதாவை முன் நிறுத்த, தே.மு.தி.க., முடிவு செய்துள்ளது. தற்போது பிரேமலதாவை முன்னிறுத்தினால் கட்சியில் பல குழப்பங்கள் ஏற்படும். அதன் காரணமாக, சட்டசபை தேர்தலுக்கு பிறகு, விஜயகாந்த்தை ஒரு பொம்மைப்போல் உட்கார வைத்து விட்டு, மாநில மகளிர் அணி தலைவியாக உள்ள பிரேமலதாவை முன் நிறுத்தி, அரசியல் பாதையில் பெரிய அளவில் கால்பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 கருத்து:

  1. இப்பவே அவர் டம்மி தானப்பா.... எல்லா பெரிய கட்சிகளிலும் ஒரு டம்மி இருக்கு...

    மேலும் தற்போதைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Latest Tamil News Online - ஐ சொடுக்கவும்.

    பதிலளிநீக்கு