சனி, 26 மார்ச், 2016

நயன்தாரா மீண்டும் பிரேக் அப் .... விக்னேஷ் சிவன் டா டா .....

அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆகி இருக்கும் நயன்தாரா, அதிக சர்ச்சையிலும் சிக்கிக்கொண்டிருக்கிறார். சிம்பு, பிரபுதேவாவுடன் பிரேக் செய்துகொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வந்தவர் ‘நானும் ரவுடிதான்’ பட இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நட்பு வளர்த்தார். இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய உள்ளதாகவும் கோலிவுட்டில் வேகமாக தகவல் பரவியது. இருவருமே நண்பர்களாக பழகுவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் நயன்தாரா.இந்நிலையில் நயன்தாராவுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஒரு வருடம் நயனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த தெலுங்கு திரையுலகிலும் அந்த தடை நீங்கியதையடுத்து சிரஞ்சீவி படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளார். இதற்காக பல கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா பிரேக் அப் செய்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.dinakaran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக