சனி, 5 மார்ச், 2016

மாணவிகள் விடுதியில் இரவில் அமைச்சர் சுந்தரராஜ் அத்து மீறல்!


புதுக்கோட்டையில் பள்ளி மாணவிகள் விடுதிக்கு இரவு நேரத்தில் திடீரென சென்ற தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சுந்தரராஜ், மாணவிகளிடம் சம்மந்தமில்லாத கேள்விகளைக் கேட்டு, அத்துமீறி நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செயல்படும் விளையாட்டு வீராங்கணைகளுக்கான உண்டு உறைவிட பள்ளி மாணவி விடுதிக்கு திடீரென இரவு நேரத்தில் சென்றுள்ளார். அங்கிருந்த மாணவிகளை மிரட்டும் தொணியில் பேசிய அவர், மாணவி ஒருவரின் டிசர்ட்டை தொட்டு பேசியுள்ளார்.
அடுத்தடுத்து மாணவிகளிடம் சம்மந்தமிலலாத கேள்விகளை கேட்டதும் மாணவிகள் செய்வதறியாது தவித்தனர். மாணவிகளின் உடல் எடை, தாய் தந்தை குறித்து பேசிய விதம் மாணவிகளை மட்டுமின்றி உடன் வந்த அதிகாரிகளையும் முகம் சுழிக்க வைத்தது. அமைச்சரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. மாணவிகள் விடுதியில் இரவில் ஆய்வு என்ற பெயரில் அத்துமீறல் செய்த அமைச்சரை கைது செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  nakkheeran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக